[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 06:43.19 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நளினி உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்றும், குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி 435(1ஏ) சட்டப்பிரிவு கூறுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சி.பி.ஐ வழக்குகளில் குற்றவாளியை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும், குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும் 435(1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் நளினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjsy.html
பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை! தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 07:01.42 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் போர்க்களத்துடன் முடிவடைந்தன. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் வேட்டையாடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் முள்வேலி முகாம்களில் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
இந்த நிலையில் உலகை உலுக்கும் ஒரு படம் வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரோடு இராணுவ முகாமில் இருப்பதும் பின்னர் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பதுமான அக்காட்சி, இலங்கையின் முக்கிய போர்க்குற்ற ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள "புலிப் பார்வை" படத்தின் முன்னோட்ட காட்சிகள் அனைத்திலுமே பாலச்சந்திரன், புலிகள் இயக்க சீருடையில் இருப்பது, ஆயுதமேந்தி இருப்பது, இராணுவ பயிற்சி மேற்கொள்வது என்று போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.
பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்திடம் சிக்கிய போது மேலாடை கூட இல்லாமல்தான் இருப்பதாக உண்மை புகைப்படம் சொல்ல.. புலிப்பார்வை படத்திலோ, புலிகள் இயக்க சீருடையிலேயே இருந்து சுற்றி வளைக்கப்படுவது போல காட்டப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசும் சுப்பிரமணியன் சுவாமிகளும் சொல்வதை நிரூபிப்பது போல, பாலச்சந்திரனை புலிகள் இயக்க போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை.
அத்துடன் சிறுவர்களை புலிகள் தங்களது இராணுவத்தில் இணைத்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதாகவும் சித்தரிக்கிறது புலிப் பார்வை.
இலங்கை அரசிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் அனுமதி பெற்று படம் எடுத்தோம் என்று புலிப்பார்வை படக் குழு கூறிக் கொள்வது வினோதமாக இருந்தாலும் சித்தரிப்புகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது தமிழின உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஏற்கெனவே சந்தோஷ் சிவன் தன் பங்குக்கு இனம் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
அப்பட்டமான அந்த சிங்கள ஆதரவுப் படத்தை, என்ன ஏது என விளங்கிக் கொள்ளாமலேயே தூக்கிப்பிடித்தவர்கள்தான் தமிழ் சினிமாக்காரர்கள்.
இப்போது புலிப்பார்வையும் அந்த ஈனப் பட்டியலில் சேரும் போலத் தெரிகிறது!
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjsz.html
Geen opmerkingen:
Een reactie posten