இலங்கையுடன் இணைந்து செயற்பட வியட்நாம் விருப்பம் - அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை: கரு ஜயசூரிய
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 01:26.35 AM GMT ]
வியட்நாமிய உதவி பிரதமர் குயேன் சுவான் பிஹகு இதனை தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக வர்த்தக மற்றும் கடன் உட்பட்ட குற்றங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவராச்சியுடனான சந்திப்பின் போது வியட்நாம் உதவிப்பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் ஹனோயில் நடைபெற்றது.
இதேவேளை வியட்நாம், 2014-2016 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற, இலங்கை உதவியளித்தமைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை: கரு ஜயசூரிய
நாட்டின் அரச சேவையில் திறமைசாலிகளுக்கு இடமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாடு சீரழிந்துள்ளது. இன்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமில்லை.
சலுகைகள் பதவி உயர்வு பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகளை நாடுகின்றனர்.
இவ்வாறு அரசியல் சிபாரிசின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டவர்கள் கடமையை உரிய முறையில் செய்வதில்லை.
நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் நாட்டில் பாரியளவில் அழிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வீதிகள், பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை. எனினும், 500 மில்லியன் ரூபாவில் அமைக்கக் கூடிய பாதை 1500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்.
இவ்வாறு பணம் விரயமாக்கப்படும் போது அதனை எதிர்க்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் சீரழிந்துள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளது.
இந்த தவறுகளை திருத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்.
அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி மீது புலி முத்திரை குத்தி, புலித் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது.
நாடு நாளுக்கு நாள் அழிவுப்பாதையை நோக்கி நகர்கின்றது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் வியலுவ கரமெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr2.html
இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 01:28.34 AM GMT ]
கிருமிநாசினிகள் பயன்பாடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தவர்கள் அல்லது. தற்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இயற்கை வளம் அழிவடைகின்றது.
கிருமிநாசினி பயன்பாட்டினால் புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களும் ஏற்படுகின்றன. கிருமிநாசினி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
நல்ல பழங்கள் என நம்பி வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றோம். அதனை உட்கொள்ளும் சிறுவர் சிறுமியர் நோய் வாய்ப்படுகின்றனர்.
எமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். எனினும் எமது விவசாய நிலங்களை கைப்பற்றி, அதில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர்.
இராணுவத்தினர் குறைந்த விலைக்கு தமது விளைச்சலை விற்பனை செய்கின்றனர்.
இராணுவத்தினரின் விவசாய உற்பத்திகளுக்கும் எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கும் இடையில் விலை வித்தியாசம் உண்டு.
இராணுவத்தினர் விவசாயத்தில் ஈடுபடுவதனால் வடக்கு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் ஜீவனோபாய வழிகள் பாதிக்கப்படுகின்றன.
இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr3.html
நோர்வேஜியர்களுக்கு இலங்கை வீசா வழங்கக் கூடாது! சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:08.05 AM GMT ]
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியைன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் இலங்கை அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு வீசா வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறெட் லோசெனும் கலந்து கொண்டிருந்தார்.
நோர்வேஜியர்களுக்கு வீசா வழங்கக் கூடாது என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததையடுத்து, அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr4.html
Geen opmerkingen:
Een reactie posten