[ புதன்கிழமை, 02 யூலை 2014, 06:24.00 AM GMT ]
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இரண்டு முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு அடிப்படைவாத குழு காணி ஒன்றில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த போது, அங்கு சென்ற மற்றுமொரு அடிப்படைவாத குழு பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடந்து வருகிறது?. முஸ்லிம் சமூகத்தில் இருவேறு நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படும் இந்த இரண்டு குழுக்கள் தொடர்பில் நாம் நாட்டுக்கு தொடர்ந்தும் தகவல் வெளியிட்டு வந்தோம். தவ்ஹித் ஜமாத் மற்றும் தப்லிக் ஜமாத் ஆகிய இரண்டு அடிப்படைவாத குழுக்களே அவையாகும்.
இந்த அடிப்படைவாத குழுக்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு அவர்ளை தமது பிடிக்குள் பணயமாக எடுத்து வருகின்றன.
மேற்படி இரண்டு குழுக்களும் அடிப்படை மோதலில் ஈடுபட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்த குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் பேருவளை பிரதேசத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர். சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டன.

இதேபோன்ற மோதல் அண்மையில் சிலாபம், மாதம்பை பிரதேசத்தில் நடைபெற்றது.
கல்முனை, அக்கரைபற்று, காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் இந்த அடிப்படைவாத குழுக்கள் பகிரங்கமாக மோதல் ஆரம்பித்துள்ளன.
முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தி தம்வசம் இழுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், முஸ்லிம் அடிப்படைவாதம் என்று நாட்டில் எதுவுமில்லை என சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றன.
நாட்டை ஏமாற்றும் இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்தி அவர்களை நடு வீதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் செயற்படும் அஹமதியா ஜமாத் அடிப்படைவாதிகள் அந்நாட்டில் இருந்து விரட்டப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இலங்கைக்குள் அகதிகளாக வந்து இங்கு செயற்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ள உணவு, உடை போன்ற விடயங்கள் தொடர்பில் அந்த சமூகத்திற்குள் இருக்கும் குழுக்கள் மேற்கொண்டு வரும் கட்டளைகளை இறுதியில் பாகிஸ்தான், ஈராக் போன்று இரத்தம் சிந்தும் நிலைமைக்கு செல்லாது என்பதை எவரால் கூறமுடியும்.
பௌத்த அடிப்படைவாதம் பற்றி பொய்யான விடயங்களை கூறி, பௌத்தர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பதிலாக முஸ்லிம் சமூகத்திற்குள் தலைதூக்கி வரும் அடிப்படைவாதம் என்ற ஆபத்தை அடக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும், பாதுகாப்பு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkr3.html
யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 06:29.13 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (வயது-23) மீது நேற்று சகமாணவர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkr5.html
Geen opmerkingen:
Een reactie posten