தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

ஞானசார தேரரின் கணக்கு ஏன் முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்!

ஊவா தேர்தலில் 4 பேரை நிறுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 12:18.11 PM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியில் 4 பேரை வேட்பாளர்களாக நிறுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் மூன்று பேரையும் மொனராகலை மாவட்டத்தில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தமது கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை ஏற்கனவே தமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடம் முன்வைத்துள்ளதாக காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், ஊவா மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ.ஏ. உதயகுமாரவுக்கு தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சந்தர்ப்பம வழங்கினால், தனித்து போட்டியிட போவதாக தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp0.html
ஞானசார தேரரின் கணக்கு ஏன் முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 12:06.36 PM GMT ]
பகையான கருத்துக்கள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கப்பட்டிருந்தன் காரணமாவே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கை நீக்க தீர்மானித்ததாக பேஸ்புக் சமூக வலைத்தள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஞானசார தேரரின் இந்த செயற்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் சமூக தரங்களை மீறியுள்ளதால், அது குறித்து பலர் தெரியப்படுத்தியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர்,
பல முறை தனது பேஸ்புக் கணக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வந்ததுடன் இறுதியில் இதனை முற்றாக நீக்கியுள்ளதாக கூறினார்.
தனது பேஸ்புக் கணக்கு மாத்திரமல்ல, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தேசிய அடிப்படையில் செயற்படும் பலரது பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் தொடர்ந்து தமக்கு எதிராக பேஸ்புக் அதிகாரிகளுக்கு வழங்கிய அறிக்கைகள் காரணமாக தனது கணக்கு நீக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தேசிய உணர்வுடன் செயற்படும் பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியாளர்கள், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
இதனால் உண்மைகளை மக்களுடன் பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டோம்.
பேஸ்புக் அதிகாரிகள் கூறியுள்ளது போல், நான் எந்த இனத்திற்கோ மதத்திற்கோ எதிராக பகையான கருத்துக்களையோ, அடையாளங்களையோ வெளியிடவில்லை. நான் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தேன்.
உலக தர்மத்திற்கு அமைய உண்மையான தர்மம் மறுக்கப்பட்டு அதர்மம் அரசாளும் யுகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும். எவ்வாறாயினும் இது சம்பந்தமாக பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக தெளிவுப்படுத்தியிருந்தேன்.
அதற்கு பதிலளித்துள்ள அவர்கள், தொடர்ந்தும் ஆராய்ந்து பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.
இணையத்தள சந்தர்ப்பத்திற்கு தடையேற்படுத்த முடியாது என்பதால், வேறு வழிமுறைகள் மூலமாக எனது கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன்.
இவ்வாறு சென்றால் இறுதியில் சகல சமூகங்களும் அப சரணம் ஏற்படும் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjpz.html

Geen opmerkingen:

Een reactie posten