[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 12:14.37 AM GMT ]
தேசிய சுத்திர முன்னணி முன்வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்தே முன்னணிக்கு முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தமது நிலைபாடு தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பதற்கு முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHTZLbjw3.html
இந்தோனேசியாவில் கடனட்டை களவு! இலங்கையர்கள் இருவர் உட்பட மூவர் கைது
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 12:45.32 AM GMT ]
இதில் ஒருவர் இந்தோனேசிய பெண்ணாவார். இவர் கைதுசெய்யப்பட்ட ஆண்களில் ஒருவரின் மனைவியாவார்.
கைதான ஆண்கள் சிவா மற்றும் ரஞ்சன் என்று அடையாளம் காணப்பட்டள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய கமராக்கள் மற்றும் விசேட சாதனங்களைப் பொருத்தி இலத்திரனியல் அட்டைகளின் தகவல்களைப் பெற்று அவற்றின் ஊடாக போலியான அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஏடிஎம் தன்னியக்க இயந்திரத்தில் இருந்து 3.9 பில்லியன் மெரிக்க டொலர்களை களவாடிய குற்றத்துக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவுக்கு கணினி தொடர்பாக சாதனங்களை அனுப்பும் கனேடிய பிரஜைகளுடன் இவர்கள் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட சாதனைத்தைக் கொண்டே இலத்திரனியல் அட்டையிலுள்ள தகவல்களை இரகசியமாகப் பிரதிபண்ணப் பயன்படுத்தியதாகவும் இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த ஜூலை முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 260 கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
களவாடிய பணத்தை கொண்டு இவர்கள் கார்ää இரண்டு வீடுகள் மற்றும் கோழிப்பண்ணை ஆகியவற்றுக்கு உரிமையாளர்களாக இருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரும் சர்வதேச புலம்பெயர் அமைப்பான ஐஓஎம்மின் பாதுகாப்பிலேயே இந்தோனேசியாவில் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTZLbjw5.html
சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 01:00.14 AM GMT ]
இதற்கான திகதி இன்னும் முடிவாகவில்லை. எனினும் விரைவில் அவரது பயணம் இடம்பெறும் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த வாரத்தில் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் சீன உதவி பிரதமருக்கும் இடையில் சீனாவில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது கருத்துரைத்த சீன உதவி பிரதமர், சீன ஜனாதிபதியின் உத்தேச இலங்கை விஜயம் இராஜதந்திர உறவில் முக்கியமான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதராக சீனாவுக்கு சென்று அங்கு பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கும் ஒரே நாடு சீனா என்றும், இந்த முதலீடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இதன்போது சீன மொழி தொலைக்காட்சிகள், தொழில் முதலீடுகள் உட்பட்ட விடயங்கள் பேசப்பட்டன.
அதேநேரம் இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டுள்ளதுடன், தற்போதைய தரவுகளின்படி இலங்கைக்கு வருகைதரும் சீன உல்லாச பயணிகளின் எண்ணிக்கை 140 வீதத்தால் உயர்ந்துள்ளதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அகதிகளின் நிலைதான் என்ன? - தமிழ் அமைப்புகள் கவலை - அவுஸ்திரேலியா மெளனம்!- சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 01:08.24 AM GMT ]
அண்மையில் படகு மூலம் வந்த 153 அகதிகள் தொடர்பான உண்மையான நிலைமைகள் தெரியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால், இவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது கூடவும் அராசாங்கத்தால் அறிவிக்கப்படாத காரணத்தால் 153 பேரும் இலங்கைக்கு சென்றிருந்தால் அவர்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கபடுகிறார்களா? இல்லை சிறையில் அடைக்கபட்டு சித்திரவதைக்கு உட்படுத்தபடுகின்றார்களா? என்பதை அவுஸ்திரேலியா அரசுக்கு உண்மையான நிலைமையை அறிவிக்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கடப்பாடாக உள்ளதென தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.
தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை ஒரு சமாதானம் மிக்க நாடாக உள்ளது என ஆஸி. பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு நிருபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உண்மையான நிலைமையை அறிவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவுஸ்திரேலியாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திற்கோ அல்லது அவுஸ்திரேலியா வாழ் தமிழ் அமைப்புகளுக்கோ அறிவிக்கும்படி அவுஸ்திரேலியா தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
காரணம் அவுஸ்திரேலியா அரசாங்கம் கூறுவது போல் இலங்கையில் தமிழர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இவர்களின் உறவினர்களை இவர்களுடைய சரியான அடையாளத்தை உறுதிப்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும்படி தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
புகலிடக் கோரிக்கையாளரது படகுகள் குறித்த அவுஸ்திரேலியா மெளனம் - சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் இரு படகுகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் மெளனத்தைக் கடைப்பிடிப்பதையும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதையும் சர்வதேச மன்னிப்புச்சபை கடுமையாகக் கண்டிக்கிறது.
எல்லைப் பாதுகாப்புக் குறித்து கடைப்பிடிக்கப்படும் இரகசியத்தன்மை மூலம் இதற்கு முடிவுகாண முடியாது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் அகதிகளுக்கான பேச்சாளர் கிரேமி மக்கிரகொர், குடிவரவுத் துறை அமைச்சர் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்புகிறார்.
ஆனால், இந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவுஸ்திரேலிய மக்களுக்குள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கையிடம் மீள ஒப்படைப்பது கொள்கைக்கு முரணானது.
அந்த மக்கள் யாரால் துன்புறுத்தப்பட்டார்களோ, அவர்களிடத்தில் சித்திரவதை யையும் மரணத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம். கடலில் வைத்து விடியோவை பயன்படுத்தி அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது கண்மூடித்தனமான செயல், தங்களுடைய புகலிடக் கோரிக்கையைத் தெளிவாகவும், நேர்மையாகவும் முன்வைப்பதற்கான அவர்களது உரிமையை மீறும் நடவடிக்கை. அவுஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு பயன்படுத்தும் முறைகளை மன்னிப்புச்சபை கண்காணித்து வருகின்றது.
தமிழ் மற்றும் வியட்நாமிய புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்துவதால் உரிய நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த விசாரணை நடைமுறை பல தவறுகளைக் கொண்டது என்பதுடன் பாரபட்சமானது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகளை விட அரசு தனது அரசியலிற்கே முக்கியத்துவம் கொடுப்பதை இது புலப்படுத்துகிறது. குறிப்பிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்குமாறு அவுஸ்திரேலிய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செயற்படாத பட்சத்தில் அது சர்வதேச கடப்பாடுகளை மீறும் செயல் என கிரேமி மக்கிரகொர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTZLbjw7.html
Geen opmerkingen:
Een reactie posten