தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

நாம் பேசுவதனை எவராலும் தடுக்க முடியாது!– ஞானசார தேரர்- பேருவளை, அளுத்கம சம்பவம் ஒரு சர்வதேச சதி: முஸாமில்

இலங்கையில் சமாதானம் இந்தியாவுக்கே நன்மை!- சீனா நம்பிக்கை - பசில் சீனா சென்றுள்ளார்!
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:21.35 PM GMT ]
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட்டுள்ளமையானது, தென்னாசியாவின் ஜாம்பாவான் என்ற அடிப்படையில் இந்தியாவுக்கே நன்மை பயப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் ரென் பாகியாங், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
சீனாவினால் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் இந்தியாவும் நன்மை பெறுகிறது என்று ரென் தெரிவித்தார்.
போருக்கு பின்னர் இலங்கையில் சீனாவின் உதவியுடன் வீதிகள், துறைமுகங்கள் மற்றும் மின்சார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை மின்சார நிலையத்தினால் இலங்கையின் 53 வீத மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் குறைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் ரென் குறிப்பிட்டார்.
இதேவேளை மனித உரிமை விடயங்களிலும் சீனா இலங்கைக்கு உதவும் என்று ரென் பாகியாங் தெரிவித்தார்.
பசில் சீன உதவி பிரதமரை சந்தித்தார்
இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சீனாவின் உதவி பிரதமர் வாங் யங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்ச சீனாவுக்கு சென்றுள்ளார்.
அவர், அங்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது சீன தொழில் அதிபர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வது தொடர்பில் சீனா அரசாங்க தரப்பினர் தமது ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku3.html
இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களின் படகுகள் மூலம் ஊடுருவ பாக். தீவிரவாதிகள் திட்டம்?
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:25.11 PM GMT ]
இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழக மீனவர்களின் படகுகள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி நாச வேலைக்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நள்ளிரவு முதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி, சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கடற்கரை கிராமங்களுக்குள் சென்று திரும்பும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிலும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும், சின்னமுட்டம், கோவளம், மணக்குடி, ஆரோக்கியபுரம், ராஜாக்கமங்கலம்துறை கடற்கரை பகுதிகளிலும் பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் வந்து நாட்டு படகில் செல்லும் தமிழக மீனவர்களை தாக்கி அந்த படகு மூலம் நுழைய திட்டமிட்டு இருப்பாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, மீனவர்கள் யாரும் தனியாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், யாராவது சந்தேகப்படும் படி இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku4.html
நாம் பேசுவதனை எவராலும் தடுக்க முடியாது!– ஞானசார தேரர்- பேருவளை, அளுத்கம சம்பவம் ஒரு சர்வதேச சதி: முஸாமில்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 11:56.38 PM GMT ]
நாம் பேசுவதனை எவராலும் தடுத்த நிறுத்த முடியாது என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினரால் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாம் பேசுவதனை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை.
நாம் அஹிம்சை வழியிலேயே பேசுகின்றோம்.
பாதி சிங்களம் கலந்தவர்களே இதனைச் செய்கின்றனர்.
நாம் தூய சிங்களத்தில் பேசுகின்றோம்.
நாம் பேசுவதனை தடுக்க எவராலும் முடியாது.
நாம் நாளையும் பேசுவோம் என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பேருவளை, அளுத்கம சம்பவம் ஓர் சர்வதேச சதித்திட்டமாகும்: முஸாமில்
பேருவளை, அளுத்கம சம்பவம் ஓர் சர்வதேச திட்டமென்றே கருதுவதாக கொழும்பு மாநகரசபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸாமில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டும் வகையில் இவ்வாறான சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கிலிருந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலத்திற்குள் பிரபாகரன் விரட்டியது ஏன்? முஸ்லிம் மக்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்காமையே இதற்கான காரணமாகும்.
முஸ்லிம் மக்கள் நாட்டின் பாதியை ஒரு போதும் கேட்டது கிடையாது.
கொழும்பு நகரில் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
கொழும்பில் அதிகளவில் பௌத்தர்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்களவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், முஸ்லிம்கள் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இன்று முஸ்லிம் மக்கள் சிறிய குழுவொன்றில் பிடியில் சிக்கியுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம்.
அரந்தாலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டார்கள், காத்தான்குடியில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
எனினும், முஸ்லிம்கள் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை. கருணா அம்மானை அலி சாஹிர் மௌலானாவே கொழும்பிற்கு அழைத்து வந்தார்.
சர்வதேச சமூகத்தில் முஸ்லிம் நாடுகளே இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன. இவ்வாறான ஓர் நிலையில் ஏன் முஸ்லிம்கள வெறுக்கப்படுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் கொழும்பு நகரசபையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது முஸாமில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkvy.html

Geen opmerkingen:

Een reactie posten