தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

லண்டனில் உள்ள 8 பேருக்கு எதிராக இலங்கையில் கிரிமினல் வழக்கு: லேட்டஸ்ட் தகவல் !

பிரித்தானியா இலங்கை அரசுக்கு கொடுக்கும் அடி: இலங்கையின் பொறிமுறை தோல்வியடைந்துள்ளது !

[ Jul 04, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14300 ]
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை தோல்வியடைந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிய தரத்தில் இலங்கையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என பிரபுக்கள் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார சிரேஸ்ட அமைச்சர் பார்னொஸ் வார்சீ (Baroness Warsi) தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்படவில்லை எனவும், பகுதியளவிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தத் தவறியுள்ளது என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான அரசியல் விருப்பம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டிலிருந்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் சர்வதே சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/354.html

லண்டன் தீ விபத்தில் இறந்துபோன தமிழர் பெண் இவர் தான் (புகைப்படம் இணைப்பு)

[ Jul 04, 2014 11:58:51 AM | வாசித்தோர் : 27220 ]
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன் தினம் அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண் 56 வயதுடைய சர்மினி ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
பெண்ணின் கணவரான 58வயதுடைய ஜெயகுமார் தில்லையம்பலம் என்பவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் மகள் ஷஷ ஜெயகுமார்(23) விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். குறித்த பெண் கொழும்பில் வசித்து வந்த நிலையில், பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/357.html

லண்டனில் உள்ள 8 பேருக்கு எதிராக இலங்கையில் கிரிமினல் வழக்கு: லேட்டஸ்ட் தகவல் !

[ Jul 04, 2014 12:30:28 PM | வாசித்தோர் : 16585 ]
லண்டனில் வசித்து வரும் 8 ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொழும்பில், கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. குறித்த இந்த 8 நபர்களும் தமிழர்கள் என்றும் அவர்கள் சர்வதேச அளவில் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியே, கொழும்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு முதல் கட்டத்தில் உள்ளதால், இதில் கூறப்பட்டுள்ள நபர்களின் பெயர் விபரங்களை எம்மால் தற்போது பெறமுடியவில்லை. லண்டனில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள், மற்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் இதில் உள்ளடங்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களை வரும் செப்ட்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக, முடக்க வேண்டும் என்று இலங்கை அரசு கங்கணம் கட்டி வருகிறது. அடுத்த ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னர் சில தமிழர்களை அப்படியே லண்டனில் முடக்கவேண்டும் என்று சிங்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே சிங்கள புலனய்வு இவ்வாறு இவர்கள் மீது வழக்குகளை தொடுத்துள்ளது. குறித்த 8 பேரும் இலங்கைல் இல்லாத நிலையில் இந்த வழக்கை நடத்தி முடித்து, தீர்ப்பை வெளியிட கொழும்பு நீதிமன்றம் தயாராகி வருகிறது. இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். 
http://www.athirvu.com/newsdetail/359.html



Geen opmerkingen:

Een reactie posten