[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:15.43 AM GMT ]
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணியான பி.ராஜதுரை கடந்த பொதுத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றிற்குத் தெரிவானார்.
அதன்பின்னர் இ.தொ.கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டார்.
எனினும் தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையுடனும் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை- பி.இராஜதுரை
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை எனும் அடிப்படையிலேயே நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நான் 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் போட்டியிட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.
2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் ஒவ்வொரு தோட்ட தொழிலாளிக்கும் காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் காணியும் அங்கு தனியான வீடு அமைத்து கொடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை தூரநோக்கு என்ற அடிப்படையிலும் இந்த கருத்து கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று 10 வருடங்களாக மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டை ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும் கூட இதுவரையும் எந்த தோட்டத்திலும் தோட்ட தொழிலாளிக்கு காணி உரிமை பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் காணி வழங்கப்படவில்லை. அத்தோடு தனி வீடு என்கிற கருத்து இன்றும் கனவாகவே இருக்கின்றது.
வரவு செலவு திட்டத்திலும் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக முறையான முன்மொழிகள் இடம்பெறவில்லை.
இதனால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை எனும் அடிப்படையிலேயே நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டேன் என எம்மோடு தொலைபேசியில் நடந்த விஷேட கலந்துரையாடலில் தெரிவித்தார்.
ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவி எனக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நான் தோட்ட தொழிலாளிகள் தொடர்பாக கூறிய கோரிக்கைகளுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்கியதால் நான் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்தேன் என மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo0.html
கிளிநொச்சி கிராமங்களுக்கு பசுமைத்தேசம் விதை தானிய திட்டம்- சிறீதரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:37.21 AM GMT ]
இந்த நிகழ்வுகளில் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தலைவர் குகராசா, கரைச்சி பிரதேசபையின் உறுப்பினர் தவபாலன், நாவல்நகர் கலைக்கதிர் சனசமூக நிலைய பிரதிநிதிகள், சம்புக்குளம் நாவல்நகர் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அராலி விளையாட்டுக்கழகங்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள்
பன்முகப்படுதப்பட்ட வரவுசெலவு திட்டம் 2104 நிதிஒதுக்கீட்டின் கீழ் பா.உறுப்பினர் சி.சிறீதரன் யாழ்ப்பாணம் அராலி விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டுத்துறை வளர்ச்சி கருதி விளையாட்டு உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன் மூலம் அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழகத்திற்கு உரூபா 50 ஆயிரமும் அராலி மத்தி நிலவொளி விளையாட்டுக்கழகத்திற்கு உரூபா 25 ஆயிரமும் விளையாட்டு உபகரங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மேற்படி விளையாட்டுக்கழக பிரதிநிதிகளிடம் அராலி மத்தியில் வைத்து நிகழ்வொன்றின் மூலம் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சார்பில் வலி மேற்கு பிரதேசபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் விளையாட்டு உபகரணங்களை கையளித்தார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுக்கழகங்களின் தலைவர் செயலாளர் பெருளாளர் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo1.html
சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு 23, 24ம் திகதிகள் சரியான நாட்கள்: மைதிரிபால
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:39.43 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பநிலைத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பண்டாரநாயக்கவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
டிசம்பர் 23, 24ம் திகதிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo2.html
அமைச்சர் மேர்வினை அச்சுறுத்திவிட்டு திடீரென மாயமாகிய இளைஞன் -மாலக்கவின் விளக்க மறியல் நீடிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:44.35 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவை, பெஜிரோ ரக வாகனமொன்றில் வந்த இளைஞன் ஒருவர் அச்சுறுத்திவிட்டு, அங்கிருங்கு திடீரென பறந்து மாயமாகிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
மாலக்க சில்வாவின் வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக நீதிமன்ற வாசலில் வந்திறங்கியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன், “அமைச்சரினால் எங்களுக்கு பல அசாதாரணங்கள் நிலவியுள்ளன' என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அவ்விளைஞனைப் பின்தொடர முயன்ற போதிலும் அவ்விளைஞன் வந்த வாகனம், அங்கிருந்து வேகமாகச் சென்று மாயமாகியுள்ளது.
ஸ்கொட்லாந்து பிரஜையொருவரையும் அவரது காதலியையும், கொழும்பு- டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாலக்க சில்வாவும் அவரது நண்பர்களும் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையிலேயே, அதில் கலந்துகொள்வதற்காக மாலக்க சில்வா நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.
மாலக்கவின் விளக்க மறியல் நீடிப்பு!
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக மாலக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் மீதான தாக்குதல் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது மாலக்க சில்வா மற்றும் ஆறு பேரின் விளக்க மறியல் காலத்தை நீடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி வரையில் மாலக்க உள்ளிட்ட ஏழு பேரையும் விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை பஜிரோ வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர் அச்சுறுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo3.html
Geen opmerkingen:
Een reactie posten