[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:46.16 AM GMT ]
நேபாளத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுடில்லியில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் காத்மாண்டு புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அண்டை நாடுகளுடனான நல்லுறவு பலப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று இன்று தனது நேபாள பயணத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் காத்மண்டுவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரும், இந்தச் சந்திப்பில் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.
அத்துடன், சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.
எனினும், பாகிஸ்தான் பிரதமருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி நேபாளம் பயணமானார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 18வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சார்க் மாநாடு காத்மண்டுவில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து அவரும் பாரியாரும் லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி இந்திய பிரதமருடனும் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo4.html
ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:48.15 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆசிய தேர்தல் ஆணைக்குழு, தெற்காசிய தேர்தல் ஆணைக்குழு, ஐரோப்பிய தேர்தல் ஆணைக்குழு, மற்றும் பொதுநலவாய நாடுகள் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பார்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo5.html
ஐ.நா விசாரணைக் குழுவின் விசாரணை முடிவு இலங்கைக்கு பாதகமாக அமையும்?
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 07:02.16 AM GMT ]
போர்க் குற்ற செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவே தீர்மானிக்கப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்தின் அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இலங்கை குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவே அறிவிக்கப்படும் என சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஒரு தலைப்பட்சமாக விசாரணை நடத்தியுள்ளதாகவும் 4800 போலி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
சிங்கள பத்திரிகையின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சுரேன் சுரேந்திரன் இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeo6.html
Geen opmerkingen:
Een reactie posten