தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

எல்லை தாண்டிய சிங்கள பயங்கரவாதம்! அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை!

விமானப்படை விமானம் மீதான தாக்குதல் வழக்கை தொடர்ந்தும் நடத்த உத்தரவு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 08:53.54 AM GMT ]
பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி வந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமான மீது தாக்குதல் நடத்தி சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளை தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 10,11,12 ஆம் திகதிகளில் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதி ரேமா ஸ்வர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் தொடர்ந்து 4 தினங்கள் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெறும் மூன்று தினங்களிலும் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு விடுதலைப் புலிச் சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விமான தாக்குதலுக்கு உள்ளானதில் பாதுகாப்பு படையினர் உட்பட 32 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXivy.html

மீண்டும் ஜனாதிபதி மஹிந்த: போர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 09:23.40 AM GMT ]
இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே தெரிவுசெய்யப்டுவார் என்று சர்வதேச புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த விசேட கட்டுரையொன்றிலேயே போர்ப்ஸ் சஞ்சிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
“Ten Reasons To Invest In Sri Lanka“ எனும் தலைப்பில் இந்த சஞ்சிகை கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி குறி்ப்பிடத்தக்க வகையில் இருப்பதாகவும், அதன் காரணமாக முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பங்குச்சந்தை என அனைத்துத்துறைகளிலும் பாரிய வளர்ச்சி காணப்பட்டிருப்பதாக போர்ப்ஸ் சஞ்சிகையின் கட்டுரையாளர் ஜோன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை வளர்ச்சி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிவேகப்பாதைகள் என்பனவும் கட்டுரையில் சிலாகிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் எதிர்வரும் தேர்தலிலும் ஜனாதிபதியே மீண்டும் வெல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அக்கட்டுரை தொடர்ந்தும் தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv0.html

மீரியபெத்தையில் இன்று இரண்டு சடலங்கள் மீட்பு- உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 09:23.21 AM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.
கொஸ்லாந்த, மீரியபத்த தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கமைய மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
இன்றைய அகழ்வுப் பணிகளின்போது சிறு பிள்ளையொன்றின் சடலமும், ஆண் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இடம்பெயர்ந்த இரண்டாயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
அத்துடன் சீரற்ற வானிலையால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி மண்சரிவு ஏற்படுவதற்கான காரணமாக அமையலாம் என  சிரேஷ்ட புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சிங்கள மொழியைப் போன்றே தமிழ் மொழியிலும் மண்சரிவு அபாயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் காணாமற்போன அனைவரது தகவல்களும் உறுதி செய்யப்படும் வரை தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நிலவிய சீரற்ற வானிலை மீட்புப் பணிகளுக்கு தடையாக அமைந்ததென மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்சரிவு அபாயம் மற்றும் கடும் மழையால் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் இதுவரை மூவாயிரத்து 800 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதய குமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 525 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரது 346 பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்காக 21 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்
இன்று ஹட்டன் நுவரெலியா வீதியிலும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அதிக பனிமூட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு
கொஸ்லாந்தை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தின் சில தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது ஒருநாள் சம்பளத்தை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
சென்கிளயார், மவுண்ட்வோ்ணன், கொட்டகலை, செனன், ஸ்டொக்கம் போன்ற பகுதியிலும் மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாமல் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டனா்.
இதேவேளை, தலவாக்கலை, மற்றும் லக்ஷபான தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கொஸ்லாந்தையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்று அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXivz.html
எல்லை தாண்டிய சிங்கள பயங்கரவாதம்! அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை!
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 07:48.22 AM GMT ]
தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது.
எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கிறார்கள்.
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை, 2011 நவம்பர் 28-ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக, இதற்காக தமிழக அரசு தனி வழக்கறிஞரை நியமித்தது. இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது'' என்று அதிர்ச்சிகரமான தீர்ப்பை கடந்த 30-ம் தேதி இலங்கை நீதிமன்றம் வழங்கியது.
இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் மற்றும் ஜேசுராஜிடம் பேசினோம்.
விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவுவதாக இலங்கை அரசு கூறி வந்தது. 2009-க்குப் பிறகு விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று பூரித்தார் அதிபர் ராஜபக்ச.
ஆனால், அதன் பிறகுதான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருந்தது. 2011-ல் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களைப் பிடித்து, பொய் வழக்குப் போட்டு அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டனர்.
தமிழக அரசு, அந்த ஐந்து பேருக்கும் தனி வழக்கறிஞரை நியமித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் 2,500 ரூபாய் நிவாரணம் வழங்கி வந்தது. அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கியிருந்தது.
இந்தச் சூழலில்தான், அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது.
இந்த ஐந்து பேருடன் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 3 தமிழ் மீனவர்களும் இந்த ஐந்து பேரையும் பார்த்ததே இல்லை என்று விசாரணையின் போது கூறினர்.
ஆனால், அதை எல்லாம் நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக தூக்குத் தண்டனையை வழங்கியிருக்கிறது. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை விடுவித்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைகுறித்து, தீர்ப்பாயம் கடந்த வாரம் குன்னூரில் நடத்திய இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது உள்நோக்கம் கொண்டது என்று விவாதிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய, மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், மத்திய அரசும் அதற்கான முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று கூறினார்.
இந்த வழக்கில், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம் என்று உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiu7.html

Geen opmerkingen:

Een reactie posten