[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 09:34.33 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிப் பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் போது மீரியபெத்த சிறுவர்களின் உரிமைகளை வடமாகாண சபை கோருவது நகைப்பிற்குரியது.
இந்தக் கோரிக்கை போலியானது எனவே சிறுவர்களின் உரிமைகளை வழங்க முடியாது.
மீரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க அரசாங்கம் வெளிநாட்டு நிதிகளுக்காக காத்திருக்கவில்லை. அரசாங்கம் சொந்த செலவில் நிவாரணங்களை வழங்கியது.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் இந்த அனர்த்தத்தின் போது அரசாங்கம் செயற்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரின் உயர் கல்வி வரையிலான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
மீரியபெத்த அனர்த்தத்தில் 63 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 31 பேரைக் காணவில்லை.
பெற்றோர் இருவரையும் இழந்த மூன்று பிள்ளைகளும் தாயை மட்டும் இழந்த நான்கு பிள்ளைகளும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
மீரியபெத்த மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 296 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படும் மீரியபெத்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 1755பேரும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
மொத்தமாக 1755 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் காரணமாக 7575 பேர் நாடு முழுவதிலும் இடம்பெயர்ந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநபர்கள் நிவாரணங்களை வழங்க செல்வது சிக்கல் மிக்கது என்ற காரணத்தினால் மீரியபெத்த பகுதிக்குள் வெளிநபர்கள் செல்வது வரையறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv1.html
பொலிஸ் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது!– ரணில் விக்ரமசிங்க
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 09:42.44 AM GMT ]
பொலிஸாரின் பணி நாட்டை பாதுகாப்பதே அன்றி அரசாங்கத்தை பாதுகாப்பதல்ல.
பொலிஸார் அரசாங்கத்தை பாதுகாப்பதில் தெளிவாக செயற்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் நிகழ்வுகளின் போது அவர்கள் நியாயமாக நடந்து கொள்வதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் அணிமையில் கூட்டம் ஒன்றை நடத்தியது. சில தெருக்களில் அலங்கரிக்க பொலிஸார் அனுமதி மறுத்தனர்.
ஆனால், அரசாங்கம் அப்படியான பொது நிகழ்வுகளை நடத்தும் போது அதனை செய்ய பொலிஸார் அனுமதி வழங்குகின்றனர்.
ஜனாதிபதி அண்மையில் பல பொலிஸ் அதிகாரிகளை சந்தித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் சாத்தியங்கள் காணப்படும் சூழலில் இந்த சந்திப்பு பொலிஸ் சேவையை அரசியல் மயப்படுத்தும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் திணைக்களம் மற்றும் அதன் சுதந்திரம் குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளன எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பொலிஸ் சேவை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்களை பிரதமர் டி. எம். ஜயரத்ன மறுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv3.html
Geen opmerkingen:
Een reactie posten