தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

அடிமை வாழ்க்கையும் அரசின் மந்தப் போக்கும்!

இன்று உலக நாடுகளையும் மற்றும் அரசாங்கம் தோட்ட நிர்வாகம் ஊடகங்கள் அனைத்தையும் ஒருதடவை தங்களின் உண்மை நிலையை திரும்பி பார்ப்பதற்கு தேயிலை கொளுந்துக்கு உரமான எமது உறவுகள் பற்றி சொல்வதற்கு எமக்கு அருகதை இல்லை .
இருந்தாலும் எம்மை விட இன்று இவர்களை வைத்து அரசியல் லாபம் தேடும் அரசாங்கம், அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாகிகள் இவர்கள் அனைவர்களது அசமந்தப் போக்கே இந்த மக்களின் மரணத்துக்கு முக்கிய காரணம்.
இன்று எந்த ஒரு அரசியல்வாதியானாலும் தமிழ் மக்களுக்கு பாரிய அனர்த்தம் வந்த பின்புதான் அவர்களை போய் சந்திப்பதற்கு நேரம் கிடைக்கின்றது.
உதாரணமாக சொல்லப் போனால் கிழக்கில் ஒருவர் பசி தாங்காமல் தமது கழுத்தை அறுத்தவுடன் முண்டியடித்து போய் ஊடகத்துக்கு முன் தாங்கள் உதவி செய்வதாக காட்டும் ஈனப் பிறவி அரசியல்வாதிகளே தற்போது தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த பாதிக்கப்பட்ட மக்களின் கதைகள் அனைத்தும் அனைவராலும் மறந்து மேலும் அவர்கள் அதே லயன் மனைகளுக்கு செல்லும் நிலையே இன்று பெரும்பாலும் காணப்படுகின்றது.
இன்று உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டுவதற்கு முன்வந்த நிலையில் அரசு அதற்கு தங்களது கடும் போக்கு கொள்கையை கைவிடவில்லை.
எந்த ஒரு வெளிநாட்டு உதவிகளும் தேவை இல்லை என்று அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டவர்களின் உதவி இம் மக்களுக்கு போய் சேரக் கூடாது என்பதற்காகவா? இல்லை இவர்களும் நல்ல நிலைக்கு வந்தால் அடிமாடு போல் வேலை வாங்க முடியாது என்பதாலா என்பது ஒரு கேள்வி எழுகிறது.
உண்மையில் இங்கு தமது அனைத்து உறவுகளையும் இழந்த சிறுவர்களின் எதிர்காலம் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் உதவும் மனப்பாங்கு கொண்டவர்கள் விழித்திருக்க வேண்டும்.
சிறுவர்களை தாங்கள் பாரம் எடுப்பதாக கூறும் அரசோ அல்லது அரசியல்வாதிகளோ இவர்களை அடிமை போல் நடத்தக் கூடும்.
இன்று இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் இவர்களையும் அரசியல்வாதிகள் சகல முறையிலும் கையாளக் கூடும் முனைப்புகளும் அதிகமாக உள்ளது.
இந்த மக்களில் அக்கறை கொண்டதாக சொல்லும் தோட்ட நிர்வாகம் இன்று இவர்களின் தரவுகள் கூட புதையுண்டதாக தெரிவிக்கின்றது.
காரணம் இவர்களை இந்த தோட்ட நிறுவாகம் ஒரு தொழிலாளி போன்று கையாளவில்லை.
தங்களது தேவை அடிமாடுகள் போன்று வேலை வாங்குவது வாங்கிய பின் அவர்களுக்கு ஊதியம் என்ற பேரில் சிறிய தொகையைக் கொடுப்பது.
கடந்த காலங்களில் இவர்கள் தங்களது ஊதியத்தை சற்று கூடுதலாக கேட்பதற்கு கூட பல நாட்கள் போராட்டம் நடத்தி இருந்தார்கள்.
அப்போது கூட இந்த மக்கள் வறுமையின் காரணம் குட்ட குட்டக் குனியும் நிலை உருவானது. இது கூட ஒரு தோட்ட நிர்வாகத்தின் கடும் போக்கு கொள்கையை காட்டி இருந்தது.
இதில் இருந்து ஒன்று புலப்படுகின்றது இவர்கள் தொழில் செய்த ஊதியம் கொடுக்காமல் அதையும் தாங்கள் கொள்ளை அடிக்கலாம் என்ற ஒரு உண்மை நிலையே.
இன்று உலக நாடுகளே கணனி யுகத்தில் அனைத்தையும் கையாளும் நிலையில் இந்த தோட்ட நிறுவகம் கூறும் கருத்து ஒரு வேடிக்கையாக உள்ளது.
இவர்கள் அந்த மக்களை எவ்வாறு இதுவரை காலமும் கையாண்டு உள்ளார்கள் என்ற உண்மை நிலையும் தற்போது புலனாகின்றது.
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன மக்களின் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த மக்களுக்கு நிரந்தரமான வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்த காணிகள் கிடைக்கும் வரைக்கும் அவர்களின் உரிமைக்காக அனைவரும் பாடுபட வேண்டியவர்களாக உள்ளோம்.
இந்த மக்கள் மலையகத்தில் இலங்கை பொருளாதாரத்தில் மிகவும் ஒரு சக்தியாக இருந்தவர்கள். இவர்களது மரணத்துக்கு மிக விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.
இவர்கள் உழைக்கும் அடிமைகள் என்று இவர்களை புறம் தள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் இன்று மண்ணுக்கு வித்தான எம் உறவுகளுக்கு சாதி,மதம், அடிமை என பின்தள்ளிய அரசியல்வாதிகள் தொடக்கம் தோட்ட நிர்வாகத்துக்கும் நல்லதொரு பாடத்தினை கற்பிக்க அனைத்து மலையக மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இந்த உறவுகளின் ஊதியங்களையும் இவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் சென்றடைவதற்கு அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தமிழ் இனம் அடிமை என்னும் அவலத்தை சிதறடித்து தமிழன் என தலை நிமிர்ந்தால் அனைவரும் உங்கள் காலடி தேடி வருவது உறுதி.
எஸ்.கே
http://www.tamilwin.com/show-RUmszBTXKXis4.html

Geen opmerkingen:

Een reactie posten