தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

பிரிட்டன் பிரஜைகள் தாக்கப்பட்டமை குறித்து பிரி. உயர்ஸ்தானிகரகம் விசாரணை!

அரசியல் வாழ்க்கை முடியப் போகின்றது என்ற அச்சத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்!- அசோக அபேசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 11:48.22 PM GMT ]
அரசியல் வாழ்க்கை முடியப் போகின்றது என்ற அச்சத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமே அண்மையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை ஒர் வெற்றுக் காகிதமாகவே நோக்கப்பட வேண்டும்.
அரசியல் ரீதியாக தோல்வியை தழுவ நேரிடம் என அறிந்து கொண்ட அரசாங்கம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கும் வழியாக இந்த வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகளை நோக்க வேண்டும்.
அரசாங்கத்தின் பொய்களை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்தது.
இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசனங்களை வென்றெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியினால் முடிந்தது.
தேர்தலை வென்றெடுக்க அரசாங்கம் எவ்வளவு சிரமப்பட்டது என்பது அரசாங்கத்திற்கே தெரியும்.
அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாது வரிக்கு வரிக்கு மேல் வரியை அறிவித்து மக்களை கடுமையான பொருளாதார சுமையில் சிக்க வைத்துள்ளதாக அசோக அபேசிங்க, சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXis0.html
அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு செல்ல வேண்டுமென்பதனை புரிந்து கொண்ட குடும்பமொன்று தானம் செய்ய ஆரம்பித்துள்ளது!– ஜே.வி.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 11:58.56 PM GMT ]
அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதனை புரிந்து கொண்ட அதிகார மோகமுடைய குடும்பம் ஒன்று தான தருமங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் மேல் மாகாணசபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையிலோ, பேருவளையிலோ அல்லது வேறு ஒர் இடத்திலோ எடுத்த தீர்மானம் பற்றி எமக்கு கவலையில்லை.
சட்டவிரோத வேட்பாளரை தோற்கடிக்க நாம் தயார் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
18ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதனால் மஹிந்த ராஜபக்சவிற்கு மூன்றாம் தவணை போட்டியிட அதிகாரம் கிடையாது.
நாட்டில் பலருக்கு இந்த விடயம் தெரியாது. எனினும் மக்களை ஏமாற்றி தேர்தலில் போட்டியிட முடியாது.
செய்த பாவ காரியங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வரவு செலவுத்திட்டத்தில் நன்மைகள் வழங்கப்படுகின்றது.
அதிகாரத்தினால் தலைவீங்கிப் போன குடும்பமொன்று, அதிகாரத்தை இழந்தால் சிறைக்கு செல்ல வேண்டுமென்ற காரணத்தினால் தானம் வழங்க ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்ள முயற்சித்தால் ஜே.வி.பி அதற்கு இடமளிக்காது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நல்ல தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். தவறான தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்தமை நல்ல தீர்ப்பாகும்.
கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கிய தீhப்பு பிழையானதாகும்.
எனினும் தற்போது மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத் என் சில்வாவினால் முன்வைத்துள்ள சட்ட ரீதியாக தர்க்கம் சரியானதே என நலிந்த ஜயதிஸ்ஸ சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXis1.html
ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் (பொது) சிராணி பண்டாரநாயக்க
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:16.36 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு பிரேரிக்கப்பட்டிருந்த மாதுலுவாவே சோபித்த தேரர் இதற்கான முனைப்பை மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் விடுத்தவேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முனைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது வேட்பாளராக சிராணி பண்டாரநாயக்க போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXis2.html
பிரிட்டன் பிரஜைகள் தாக்கப்பட்டமை குறித்து பிரி. உயர்ஸ்தானிகரகம் விசாரணை
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:57.58 AM GMT ]
அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலகவினால் பிரித்தானியாவின் இளைஞனும் யுவதியும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம், கொழும்பு, டுப்ளிகேசன் வீதியில் உள்ள இரவுநேர கேளிக்கையகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.
இதன்போது பிரித்தானிய ஜோடிகளுக்கு முகங்களிலும் தலைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்னும் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துக்கூற முடியவில்லை என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தின் போது 43 வயதான ஸ்கொட்லாந்தின் ஜேம்ஸ் பிரான்ஸிஸ் மற்றும் அவருடைய நண்பியான 24 வயதான பெலின்டா மேக்கனைஸ் ஆகியோரே காயமடைந்தனர்.
எனினும் குறித்த பிரித்தானியர்கள் பொலிஸ் விசாரணைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2011ம் ஆண்டும் தங்காலையில் வைத்து பிரித்தானிய ஜோடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் விடயம் சர்வதேச அளவில் இலங்கைக்கு பிரச்சினையை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXis3.html

Geen opmerkingen:

Een reactie posten