இலங்கையில் பொலிஸ் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளது ரணில்�
|
இலங்கையில் பொலிஸ் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.�நாட்டை பாதுகாக்க வேண்டியதே பொலிஸாரின் பணி அரசாங்கத்தை பாதுகாப்பதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பொலிஸார் அரசாங்கத்தை பாதுகாக்கும் விதத்தில் செயற்படுவது தெளிவாக தெரிகின்றது,அதேவேளை எதிர்கட்சிகள் நிகழ்வுகளை எற்பாடு செய்யும்போது அவர்கள் நேர்மையாக, பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவதில்லை,
சமீபத்தில் ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் பேரணியொன்றை நடத்தியபோது அதற்க்கு பல தடைகள் விதிக்கப்பட்டன, ஆனால் அரசாங்க கூட்டங்களுக்கு அவ்வாறான தடைகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
ஜனாதிபதி சமீபத்தில் பல பொலிஸ் அதிகாரிகளை சந்தித்துள்ளார்,ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொலிஸ் சேவையை மேலும் அரசியல்மயப்படுத்தும் நடவடிக்கை போல் இது தோன்றுகிறது. ஏன தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேர்தல் திணைகளத்தின் சுதந்திரமான நிலை குறித்தும் கேள்விஎழுப்பியுள்ளார். |
03 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415008994&archive=&start_from=&ucat=1& |
சிராணி திலகவர்த்தனவை பிரிட்டனிற்கான புதிய தூதுவராக நியமிக்க ஜனாதிபதி விருப்பம்
|
முன்னாள் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிராணிதிலகவர்த்தனவை பிரிட்டனிற்கான புதிய தூதுவராக நியமிக்கவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை பதவிவிலக்குவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் பொய்யான வாக்குமூலத்தை அளித்தமைக்காவே மகிந்த அவரிற்;கு இந்த பரிசை வழங்க விரும்புகின்றார்.
சிராணி பண்டாரநாயக்க தவறிழைத்தார் என்ற முடிவிற்;கு பாராளுமன்ற தெரிவுக்குழு வருவதற்கு சிராணி திலகவர்த்தன அளித்த வாக்குமூலங்களே காரணமாக அமைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அவரது ஆதாரங்களை எந்தவித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் கடற்படை தளபதி ஜயந்த கொலம்பகேயை பிரிட்டனிற்கான தூதுவராக நியமிக்க வேண்டும் என்பது குறித்து தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்திவருகின்றார். |
| 03 Nov 2014 |
அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பட்டுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றது தயான்
|
அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் தரித்து நிற்க அனுமதிப்பளிப்பது குறித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீன நீர் மூழ்கிக் கப்பல்களை அனுமதிக்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் நேரடியாக கோரியிருந்தது. அரசாங்கம் இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் இந்தப் பிரச்சினைக்கு சீனாவை குற்றம் சுமத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை வலுவான கட்டமைப்பைக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் அணுகுமுறைகள் பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச பெறுமதிகளுக்கு உரிய வகையில் மதிப்பளிக்காமை, ராஜதந்திர ரீதியில் முரண்பாடுகளை ஏற்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை வென்றெடுத்த அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முரண்பாட்டு ரீதியான ராஜதந்திர அணுகுமுறைகளை பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார் |
03 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415007305&archive=&start_from=&ucat=1& |
யுத்த காலத்தை விட வடக்கில் இராணுவம் அதிகம் ஆயர் ராயப்பு ஜோசப்
|
Geen opmerkingen:
Een reactie posten