[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 09:45.11 AM GMT ]
அங்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பின்பு படிப்படியாகத் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய ஊர்களில் தற்காலிக முகாங்கள் அமைத்து அங்கு மேற்படி மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் இவர்களுக்குப் பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களால் உலர் உணவு வழங்கப்பட்டது.
2009ம் ஆண்டைத் தொடர்ந்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் வெளியேறிய பின் இலங்கை அரசு இவர்களுக்கு இடர் உதவி வழங்கி வந்தது.
இந்த நிலையில் சம்பூர் பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாது. அவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இந்த இடங்கள் விவசாயம் செய்ய முடியாதவை. எனவே இவ்விடங்கள் தமக்கு வேண்டாம் தமது சொந்த இடங்களுக்குப் போகவிடுங்கள் என்று சம்பூர் மக்கள் கேட்டனர்.
இலங்கை அரசு அதை ஏற்க மறுத்து விட்டதோடுதான், கூறியதை ஏற்றுக் கொண்டுதான் கூறிய இடத்தில் குடியேறாதபடியால் உலர் உணவு, மின்சாரம், நீர் அனைத்தையும் இலங்கை அரசு நிறுத்திவிட்டது.
இம்மாத முற்பகுதியில் அகவை எண்பது உடைய முதியவர் (இரண்டு ஆண் பிள்ளைகளையும் மருமகனையும் போரில் பலி கொடுத்தவர்) மனைவி, மகள், பேரப்பிள்ளை ஆகியோரின் வயிறுப் பசியைக் காணப் பொறாமல் தனது கழுத்தை வெட்டித் தற்கொலை செய்ய முயன்று உள்ளார்.
மேற்படி நிலைமையைக் கவனத்தில் கொண்டு கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிசங்கமானது இவர்களுக்கு உலர் உணவு வழங்கும் பொருட்டாக மூன்று இலட்சம் ரூபாவை உடனடியாக எமக்கு அனுப்பி இருந்தது.
இப்பணத்தின் மூலம் உலர் உணவு கொள்வனவு செய்யப்பட்டு கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இருநூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்டத் தமிழ் அரசு கட்சியின் தலைவருமான சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுகட்சியின் பொதுச் செயலாளருமான துரைராசசிங்கம் ஆகியோரால் கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இருநூறு குடும்பங்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjvz.html
பதுளை மண் சரிவு: அநாதரவான சிறுவர்களை பொறுப்பேற்கவுள்ள வட மாகாண சபை
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 10:06.36 AM GMT ]
நேற்று வட மாகாண சபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,
மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நிலச்சரிவு இடரால் 75 சிறுவர்கள் வரையில் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு அரசு பொறுப்பேற்பதன் மூலம், எதிர்காலத்தில் மொழி ரீதியாக கலாச்சார ரீதியாக அவர்களை மாற்றக் கூடும் எனவே குறித்த சிறுவர்களை வடக்கு மாகாண சபை பொறுப்பேற்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியின் விடுதியில் அந்த மாணவர்களைத் தங்க வைத்துப் படிப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடினேன். இவ்வாறு ஒவ்வொரு பாடசாலைகளிலும் அவர்களை தங்க வைத்துப் படிப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjv0.html
Geen opmerkingen:
Een reactie posten