இலங்கையில் நேற்று தமிழர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டதும், ராமேஸ்வர பகுதியே போர்க்களமாக மாறியது.
ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டதுடன், பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய- மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு எங்களது கணவன்மார்களை காப்பாற்ற வேண்டும் என கூறி மனைவிகள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், மத்தியில் பாஜக பொறுப்பு ஏற்றதும், போதைப் பொருள் வழக்கில் தவறாக கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் உள்பட இலங்கையில் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனை கேட்டதும் மகிழ்ச்சியடைந்தோம், ஆனால் வாக்குறுதிகள் சொல் அளவில் மட்டுமே இருந்தன.
இந்நிலையில் கொழும்பு நீதிமன்றம் ஐந்து மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது என்ற செய்தி கேட்டதும் நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம்.
எங்களது குடும்பத்தை காப்பாற்ற எங்களது கணவன்மார்களை விடுவிக்க இனியாவது மத்திய, மாநிலை அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும் அரசு எங்களை ஏமாற்றினால் நாங்களும் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம்
தூக்கிலிருந்து மீனவரை காப்பாற்றக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6க்குள் ஐந்து பேரையும் விடுவிக்காவிடில் 7ம் திகதி அனைத்து சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும், ஆலோசனைக்கு அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகளும் அழைக்கப்படுவார்கள்.
இதில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது பற்றி நவம்பர் 7ம் திகதி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.newindianews.com/view.php?22cMW402JOAce27mKdb2Y0Mad3o4Sec3ODh042AlJ2226AU3 |
Geen opmerkingen:
Een reactie posten