தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

கூட்டமைப்பையும் பிரித்தார் மகிந்தர்…

கோத்தாவில் கடுப்பான மகிந்த மாளிகையில் ரகசிய சந்திப்பு!

மேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஐவர், தற்போது மகிந்தர் கட்சியில் இருந்து எதிர்கட்சிக்கு தாவ ஆரம்பித்துள்ளார்கள். இதில் ஹிருணிக்காவும் அடங்குகிறார், கூடிய அதிர்சி நாமால் ராஜபக்ஷவுக்கே இருக்கும். காரணம் என்னவென்றால் இதுவரை காலமும் நாமால் நினைத்துள்ளார் ஹிருணிக்கா தன்னோடு நல்ல உறவில் உள்ளார் என்று.
இந்த கட்சி தாவல் நடைபெற்றால் மேல்மாகாண சபையின் அதிகாரமும், எதிர்கட்சியின் கைகளில் வீழ்ந்துவிடும். இதனால் மகிந்தருக்கு பெரும் இக்கட்டான சூழ் நிலைதோன்றும். எதிர்கட்சிகளுக்கு “ஸ்டார்” நாடு ஒன்று நன்றாக உதவிசெய்து வருகிறது. இத்திட்டங்களானது ஏதோ இன்றைக்கோ இல்லை நேற்றோ நடக்கவில்லை. முறையாகத் திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்னரே நடைபெற ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.
இன்று நடைபெற்ற முக்கிய புலனாய்வாளர்கள் கூட்டத்தில், ஆழும் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள அனைவரையும் கண்காணிக்குமாறு மகிந்தர் கடுமையான உத்தரவைப் போட்டுள்ளார். இதேவேளை இக்கூட்டத்திற்கு கோட்டபாய ராஜபக்ஷவை மகிந்தர் அழைக்கவில்லையாம். இவ்வளவு விடையங்கள் நடந்துள்ளது (அதாவது ஏற்கனவே நடந்த கட்சி தாவல்), ஆனால் இவை எதுவுமே கோட்டபாய ராஜபக்ஷவுக்கு தெரியாது என்கிறார்கள்.
இதனால் மகிந்தர் கோட்டபாய மீதும் கடும் அதிருப்த்தியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. மகிந்தரின் தற்போதைய முக்கிய நோக்கம் என்னவென்றால் கட்சி தாவலை தடுப்பதே ஆகும். இது வரம்பு மீறிப் போனால், மகிந்தர் தேர்தலில் தோல்வியடைவது உறுதி. சிலவேளைகளில் தான் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக மகிந்தர் அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அது சிலவேளை டிசம்பர் மாதம் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க மகிந்தர் கட்சியின் அதிமுக்கிய நபரான மைத்திரி பிரிந்துசென்றதும் அவரது பாதுகாப்பை அதிரடியாக கோட்டபாய குறைத்துள்ளார். இதனால் மைத்திரிக்கு ஏதாவது நடந்தால் அது அனுதாப அலையாக மாறிவிடும். இதனால் அவருக்கு மேலதிக வாக்குகள் விழும். எனவே உடனடியாக அவரது பாதுகாப்பை வழமைக்கு கொண்டுவருமாறு மகிந்தர் மேலும் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார் என்ற செய்தியும் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
ஒற்றைக் கண்ணோடு சிரித்தவாறு கொழும்பில் வலம்வந்துகொண்டு இருக்கிறார் சந்திரிக்கா அம்மையார். மங்கள சமரவீர மற்றும் சந்திரிக்கா அம்மையார் ஆகியோரின் ஏற்பாட்டில் தான் எல்லாம் நடக்கிறது. ஆனால் இவர்களை இயக்கும் அந்த “ஸ்டார்” கூட்டணிக்கு தான் எல்லாம் வெளிச்சம்.
http://www.jvpnews.com/srilanka/87988.html

கூட்டமைப்பையும் பிரித்தார் மகிந்தர்…

இன்று காலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பக்கம் அமர்ந்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/87993.html

Geen opmerkingen:

Een reactie posten