தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

தென்னிலங்கையில் கடற்கொந்தளிப்பு அபாயம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கொந்தளிப்புக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த வானிலை அவதான நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அதிகாலை முதல் காலி தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்பில் பாரிய அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக கடற்கரையோரப் பகுதிகளில் கடற்கொந்தளிப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்னிலங்கை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றும் பலமாக வீசும் அபாயமுள்ளதால் சிறு சூறாவளிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை காரணமாக கடலின் ஆர்ப்பரிப்பு அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் வானிலை அவதான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் காற்று இலக்கற்று சுழன்றடிப்பதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip4.html

Geen opmerkingen:

Een reactie posten