தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டை இலங்கை கண்டித்துள்ளது!

தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருடன் பேசுவேன்: நிதின் கட்கரி
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 03:08.51 PM GMT ]
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இராமேஸ்வரம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் உறவினர்கள் என்னை சந்தித்து முறையிட்டனர்.
அவர்களின் கவலைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்க இருக்கிறேன்.

மேலும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் சந்தித்து பேச இருக்கிறேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgqy.html

மீரியபெத்த மக்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 03:12.12 PM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அம்பிட்டி கந்தவில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு மக்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.
மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பூனாகலை உள்ளிட்ட அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண் சரிவில் பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு இவ்வாறு தேயிலை தொழிற்சாலையில் இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.
பின்னர் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgqz.html

ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டை இலங்கை கண்டித்துள்ளது!
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 04:01.15 PM GMT ]
முடிவுத் திகதியையும் மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படும் விதம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதன்போது சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக இறுதி திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 30ம் திகதியுடன் அந்த திகதி முடிவடைந்தது.
எனினும் அந்த திகதியை தாண்டி காலதாமதமாக கிடைக்கும் சாட்சியங்களையும் நிராகரிக்கப் போவதில்லை என்று மனித உரிமைகள் குழு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் விடுத்தவேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
வெளிப்படையாக இறுதித் திகதியை அறிவித்துவிட்டு அதனை நீடிக்கும் செயற்பாடானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgq1.html

Geen opmerkingen:

Een reactie posten