தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

வலைவீசித் தேடிய ஜனாதிபதி! ஓடி ஒளித்த அனுர திசாநாயக்க!

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை தொடர்பு கொள்வதற்கு ஜனாதிபதி நாள் முழுவதும் முயற்சித்து, முடியாமல் போன சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கடந்த அக்டோபர் 24ம் திகதி ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாளாகும்.
பொதுவாக முக்கிய அரசியல்வாதிகளின் பிறந்த நாட்களின்போது அதிகாலையிலேயே அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஜனாதிபதி, முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதை நீண்ட கால வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அடுத்து அது பற்றிய தகவல்களையும் ஊடகங்களுக்கு வழங்குவது ஜனாதிபதியின் வழக்கம்.
இதன் மூலம் அனைத்து அரசியல்வாதிகளையும் மதித்து நடக்கும் தலைவர் என்ற அரசியல் அனுகூலமும் ஜனாதிபதிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி அனுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாளின் போது அவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எனினும் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
அன்று முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடவைகள் ஜனாதிபதி அனுரகுமாரவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் கடைசிவரை தொடர்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையே தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு அதனை அரசியல் ஆதாயம் தேடும் வகையில் ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என்று அனுரகுமார எதிர்பார்த்துள்ளார்.
அதன் காரணமாக வேண்டுமென்றே தொலைபேசியை அணைத்து வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw4.html

Geen opmerkingen:

Een reactie posten