தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

இங்கிலாந்து அரண்மனை வெள்ளை மாளிகையில் எங்கள் கொடி பறக்கும்: ஐ.எஸ் தீவிரவாதி !

இங்கிலாந்து அரண்மனையிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் தங்களது கொடி பறக்கும் என ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்த இளைஞன் ஒருவன் தெரிவித்துள்ளான். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்த பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக சபதமிட்டுள்ளான். நேற்றைய தினம் குறித்த இளைஞன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளான்.
அந்த காணொளியில் மேலும் கூறியதாவது, சர்வதேச நாடுகள் சேர்ந்தாலும் எங்களை யாராலும் வெல்ல முடியாது. எங்கள் கொடி பக்கிங்காம் அரண்மனையிலும் வெள்ளை மாளிகையிலும் பறக்கும் வரை எங்கள் போராட்டும் தொடரும் எனத் தெரிவித்துள்ளான்.
அவுஸ்ரேலியாவின் சிட்னி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா எல்மீர் என்ற இளைஞன் கடந்த யூன் மாதம் சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்துள்ளான். தீவிரவாத அமைப்புடன் இணைந்த பின்னர், தனது பெயரை அபு காலித் என மாற்றி, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்னரே இவ்வாறு காணொளியொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1293.html

Geen opmerkingen:

Een reactie posten