தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

தாத்தா, பாட்டிகளின் வீடு தேடி வரும் இட்லி, உப்புமா

3000 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா வாங்கியது எப்படி? தீர்ப்பில் வெளியான உண்மை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:40.02 AM GMT +05:30 ]
ஜெயலலிதா எவ்வாறு ரூ. 53 கோடி சொத்துக்களை சேர்த்தார் என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மட்டும் 3000 ஏக்கர் நிலங்களை ஜெயலலிதா தரப்பு எவ்வாறு வாங்கிக் குவித்தது என்று தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.
அதில் ராஜகோபால் எனபவர் அளித்த வாக்குமூலத்தில் இந்த தகவல்கள் விளக்கமாக உள்ளது.
அவரின் வாக்குமூலத்தில், நான் 1994ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைக்கப்பட்டேன்.
அங்கு இருந்த வி.என். சுதாகரன் என்னிடம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எங்கெல்லாம் நிலம் விற்பனைக்கு உள்ளதோ அதைக் கண்டறியுங்கள் என்று உத்தரவிட்டார்.
அதன்படி நிலங்களைக் கண்டறிந்ததும், அவற்றை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயரில் இருந்த நிறுவனங்களின் பெயர்களுக்கு மாற்றி எழுதுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த 3000 ஏக்கர் நிலத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1994 ஆகஸ்ட் முதல் 1995 மார்ச் மாத கால இடைவெளியில் 1000 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சுதாகரன், இளவரசி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்டிருந்த ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் ரூ. 25 லட்சம் என்ற அடிமாட்டு விலையில் 1200 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டதும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.newindianews.com/view.php?20460Ym2223KODfdcea4mOJd4ce0M6AKeadcAcMQedbdbnlAS204317mY3e04cA4oQ23
ஜேசுதாஸ் மீது பொலிசில் புகார்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 12:49.39 PM GMT +05:30 ]
பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி பிரபல பாடகர் ஜேசுதாஸ் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாடகர் ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் ஆடைகள் அணிவது பற்றி கூறிய கருத்திற்கு கேரள மகளிர் காங்கிரஸ் உள்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ராஷ்ரீய ஜனதா தள மகளிர் அணி தேசிய செயலாளர் அனு சாக்கோ மின்னஞ்சல் மூலம் திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்திற்கு ஜேசுதாஸ் மீது ஒரு புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரில், பெண்கள் ஜீன்ஸ் ஆடை அணிவது பற்றி ஜேசுதாஸ் கூறிய கருத்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதால் அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் இதுபற்றி தெரிவிக்கையில், ஜேசுதாஸ் மீது புகார் வந்தது உண்மை தான். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எதுவும் தெரிவிக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.
http://www.newindianews.com/view.php?20460Ym2223KODfdceaymOJd4ce0M6AKeadcAcMQedbdbnlAS204317mY3e04cA4oQ23
தமிழகத்தில் மாற்று அரசியல்: ரஜினி, கமல் முன்வர வேண்டும்! தமிழிசை
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:06.17 AM GMT +05:30 ]
மாற்று அரசியல் வர வேண்டும் என்றால் ரஜினி, கமல் முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ரஜினி, கமல் போன்றோர் சமூக அக்கறையோடு செயல்படுபவர்கள். அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும்போது குரல் கொடுப்பவர்கள்.
தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். மற்ற கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
தமிழகத்தில் மாற்று அரசியல் வரவேண்டும். மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே இந்த நேரத்தில் மாற்றத்தை உருவாக்க ரஜினி, கமல் போன்றவர்கள் முன் வர வேண்டும், ஒதுங்கி இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20c60YO2223KODfbceacmOJ74ce2M6AK0adc4cMQCdbdexlAS2043p7mY4e04dA4oC23
அறையை விட்டு வெளிவராத ஜெயலலிதா... இது 100 சதவீத உண்மை: டிஜிஜி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 08:05.54 AM GMT +05:30 ]
ஜெயலலிதா சிறையை விட்டு வெளியே வருவதே கிடையாது என்று டிஜிஜி கூறியுள்ளார்.
சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா சிறைக்கு வந்த நாள் முதல் இதுவரை தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையும் சந்திக்கவில்லை. இது 100க்கு 100 சதவீதம் உண்மை.
ஜெயலலிதாவின் உடல் ஆரோக்கியத்தை 2 மருத்துவர்கள் தினமும் சோதனை செய்து வருகிறார்கள். அவர் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்ததை விட எனது உடல் நிலை இங்கு நன்றாக உள்ளது’’ என்று ஜெயலலிதாவே கூறினார். அவர் இதுவரை சிறை உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார். சிறை விதிமுறைகள்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினால் கைதிகளுக்கு வெளியில் இருந்து கொண்டுவரும் உணவை வழங்கலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை.
அவருக்கு தினமும் 4 ஆங்கில பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. அவர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறையில் தான் இருக்கிறார்.
அவர் முதல் மாடிக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவல் முழுவதும் பொய். இத்தகைய தவறான தகவல்களை தயவுசெய்து யாரும் வெளியிட வேண்டாம். பெரும்பாலும் ஜெயலலிதா தனது அறையை விட்டு வெளியே வருவது இல்லை. அவருடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20SAlxdbdUY063402cMQ3222Ym72adcfDOK40eM6AKaecCo4A4ce2JOm23

தாத்தா, பாட்டிகளின் வீடு தேடி வரும் இட்லி, உப்புமா
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 08:11.02 AM GMT +05:30 ]
சென்னை அண்ணாநகரில் முதியோர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.குளஞ்சியப்பன், தொழில் ஆலோசகர் யு.விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது, முதியோர் தினத்தையொட்டி, சென்னை அண்ணாநகரில் உள்ள திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் சேவை மையம் கடந்த 3ம் திகதி தொடங்கப்பட்டது.
இதனை முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராசன் தொடங்கி வைத்தார்.
தற்போதைய சூழலில் வீட்டில் சமையல் செய்ய இயலாத முதியோர்கள் கடைகளுக்குச் சென்று உணவருந்தி வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு அலைச்சல், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவை குறைந்த விலையில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக அண்ணாநகரில் இருந்து 2 கி.மீ. சுற்றளவுக்கு உள்பட்ட முதியோருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
உணவு தேவைப்படும் முதியோர் 94444 22890, 94449 83296 ஆகிய தொலைபேசி எண்களில் எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று உணவு வழங்கப்படும்.
காலை, இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, உப்புமாவும், மதிய உணவாக சத்தான காய்கறிகளுடன் கூடிய அரிசி சாதமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
http://www.newindianews.com/view.php?20SAlxdbd4Y063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecCo4A4ce2JOm23

Geen opmerkingen:

Een reactie posten