தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

பொலிஸ் அதிகாரி தாக்கிய இரத்தினபுரி பெண்ணின் தாயும் கைது!

ஜேர்மனியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு முக்கிய தலைவர்களுடன் கோலாகலமாக ஆரம்பமானது
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 09:50.42 PM GMT ]
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் அம்மன் ஆலயத்தில் மகா யாகத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.
உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் செயற்பட்டு வருகின்றது.
இம் மாநாட்டிற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட பேராசிரியர்கள் தமிழ் துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உலகில் தமிழைப் பாதுகாக்க பல துறை சார் அறிஞர்கள் ஜேர்மனி ஹம் நகரத்தில் முகாமிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இம் மகாநாட்டில் உலகில் வாழும் ஒவ்வெரு தமிழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்
http://www.tamilwin.com/show-RUmszATXKVes2.html
பொலிஸ் அதிகாரி தாக்கிய இரத்தினபுரி பெண்ணின் தாயும் கைது!
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 11:30.58 PM GMT ]
இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன்ட் தர அதிகாரி  ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் தாய் ( 65 வயது)  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த பெண்ணின் தாய், நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர், இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணின் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்த சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
தான் செய்த முறைப்பாட்டை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஏற்காமை மற்றும் தன் மீதான தாக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் தலைமையகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்று, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமான முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVes3.html

Geen opmerkingen:

Een reactie posten