தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா கவலை!

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் மீது நடந்தப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் கவலை வெளியிடப்பட்டது.
இன்று ஜெனிவாவில் அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் பொது குழு நடப்பதற்கு முன் தனி கூட்டம் நடாத்தி, ஐ.நா மனித உரிமைகள் குழுவை சந்தித்துள்ளனர்.
இலங்கை சர்ச்சைகள் எழுப்பட்டதை பற்றி ஐ.நா மனித உரிமை தலைவர் சேர் நிகல் ரோட்லீ கூறுகையில், மனித உரிமை பாதுகாப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில்,
இலங்கையில் இருந்து 8 அரச சார்பற்ற அமைப்புகள், ஐ.நா மனித உரிமை குழுவில் வாய்வழி அறிக்கைகளை வழங்கினர்.
இதில் காணாமற்போதல், சித்திரவதை, பொறுப்புடைமை மற்றும் தண்டனையில் மேல் பிரச்சினைகள், சிறுபான்மையினர் மீது நடந்த தாக்குதல் மற்றும் நில பிரச்சினைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
ஜெனிவாவில் இன்று தொடக்கம் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை குழுவின் 112வது அமர்வில், இன்றும் நாளையும் இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமை குழு மனித உரிமை ஒப்பந்தத்தில் உள்ளதையும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றி உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmu4.html

Geen opmerkingen:

Een reactie posten