[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 08:47.11 AM GMT ]
பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு விமானத்தினுள் மரணமாகியுள்ளார்.
பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet1.html
மட்டு.நாவற்குடா பொறியியலாளர் வீட்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது! பொருட்களும் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 08:35.05 AM GMT ]
கடந்த வாரம் நாவற்குடா அம்பாள் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொலநறுவை மாவட்ட நிறைவேற்று பொறியியலாளரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி ரஹீமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதன்போது 46 பவுண் தங்க நகைகள் மற்றும் லப்டோப், கைத்தொலைபேசி உட்பட சுமார் 39 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையின் போது குறித்த கொள்ளையர் கைதுசெய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பெரியபோரதீவில் நகை வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டதுடன் பொருட்கள் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மீட்கப்பட்டதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவங்களில் தீவிர விசாரணையை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களான உபாலி தர்மசிறி, சியலகம, ஜயசிங்க, பத்மநாதன், ரொபீன், திசாநாயக்க ஆகியோர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet0.html
Geen opmerkingen:
Een reactie posten