[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 07:33.12 AM GMT ]
2015ம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் இந்த மாதம் 24ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான மூன்றம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் மூன்றம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தலை அவசர அவசரமாக நடாத்தும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்டம் முன் கூட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்க்பபடுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmtz.html
அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை! பின்வாங்கும் அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 08:01.12 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடும்போக்கில் தளர்வு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது.
எனினும் இதனை அமெரிக்கா மறுத்திருந்தது. மஹிந்த ராஜபக்சவுடனான ஜோன் கெரியின் சந்திப்பு சம்பிதாய பூர்வமான சந்திப்பு மட்டுமே என்று அமெரிக்கா விளக்கமளித்திருந்தது,
இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை தொடர்பான கொள்கைகளில் தளர்வு ஏற்பட்டிருப்பதாக கருத முடியாது என்றும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா தொடர்பான இலங்கை அரசின் ஒருதலைப்பட்ச அறிக்கை ராஜதந்திர ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அந்த அறிக்கைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு இல்லை என்று தற்போது மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இந்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது. “US stance on Sri Lanka softens” எனும் தலைப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஜோன் கெரி - மஹிந்த சந்திப்பு இருநாடுகளுக்கிடையிலான ஆரோக்கியமான உறவைக் கட்டியெழுப்பும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmt1.html
Geen opmerkingen:
Een reactie posten