தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

அதிமுகவில் இணைகிறாராம் குஷ்பு?


நடிகை குஷ்பு விரைவில் அதிமுகவில் இணைவார் என தக்வல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, தீபாவளி சஸ்பென்சாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன். அதற்காக என்னை வாழ்த்துங்கள். என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்று இப்போது சொல்ல மாட்டேன். உடனே புதுப்படம் அல்லது தொலைக்காட்சியில் நடிக்கப் போகிறேன் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/84763.html






Geen opmerkingen:

Een reactie posten