தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

தீபா “வலி” - ஒளியில் கருகும் பிஞ்சுகள்! கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி!

தீபாவளி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது வான வேடிக்கைகள் தான். புத்தாடைகளும் இனிப்புகளும் அனைத்து விழாக்களிலும் பொதுவாக இருக்கும் நிலையில் தீபாவளியின் தனி சிறப்பாகவே வெடிகள் பார்க்கப்படுகின்றன.
இவைகளை வெடிப்பதன் மூலம் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுவதாக கூறினாலும் இதனால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல ஆபத்துகள் ஏற்படுவதை மறுக்கமுடியாது.
மழையளவு குறைந்து காணப்படும் கிராமங்களில் ஏழை மக்கள் மற்றும் பள்ளிக்கு கூட செல்லமுடியாத அவர்களது பிஞ்சு குழந்தைகள் தங்கள் கைகள் ஆபத்தான வெடி மருந்துகளை கைகளில் நேரடியாக எடுத்து தயாரிக்கின்றனர்.
ஆண்டுதோறும் பட்டாசு தயாரிப்பில் வேலைபார்க்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெடிமருந்தால் ஏற்படும் விபத்துகளில் கை, கால்களை இழப்பது முதல் உயிரையும் இழக்கின்றனர்.
மேலும் இந்த வெடிகளை வாங்கி வெடிப்பதனால் வெளியாகும் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களால் பலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதுடன் காற்று மாசடைதலும் ஏற்படுகிறது.
அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளால் சிறுகுழந்தைகள், முதியவர்கள் மற்றும் மிருகங்கள் வரை அனைவருக்கும் ஒலி மாசடைதலால் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே தீபாவளியை கொண்டாடுவது என்பது வெடி வெடிப்பது மட்டுமல்ல என்பதனை உணர்ந்து அனைவரும் இனிமையான தீபாவளியை கொண்டாடும் முயற்சியை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWetz.html

Geen opmerkingen:

Een reactie posten