தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

இலங்கை மனித உரிமை அறிக்கை மீள்பரிசீலனை இன்றும், நாளையும் ஐ.நா வில்..

அருண் செல்வராஜனுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பா?- புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 11:59.38 AM GMT ]
பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜனுக்கு, கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அருண் செல்வராஜனின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததில், ஜாகீர் உசேனின் கூட்டாளிகளான, முகமது சலீம், ரபீக் ஆகியோரிடம் அவர் அவ்வப்போது பேசியது தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சலீம், ரபீக் ஆகியோர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் கைத்தேர்ந்தவர்கள் என்பதால், அருண் செல்வராஜனுக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக சலீம் மற்றும் ரபீக் அளித்த தகவல்களின் அடிப்படையில் அருண் செல்வராஜன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண் செல்வராஜனின் நீதிமன்ற காவல் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் பதிவு செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmu1.html
ஐ.தே.கவின் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 12:23.31 PM GMT ]
ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி 13 உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவம் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmu2.html
இலங்கை மனித உரிமை அறிக்கை மீள்பரிசீலனை இன்றும், நாளையும் ஐ.நா வில்..
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 11:05.46 AM GMT ]
ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 112 வது கூட்டம் இன்று 7ம் திகதி முதல் வரும் 31ம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.
இந்த கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை சம்பந்தப்பட்ட ஐந்தாவது அறிக்கை 18 பேர் அடங்கிய குழுவினால் மீள்பரிசீலனை செய்யப்படவிருக்கின்றது.
இந்த மீள் பரீசீலனை இன்றும், நாளையும் சிவில் மற்றும் அரசியல் உரிமை சம்பந்தமாக ஆராயப்படவிருக்கின்றது என தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmuz.html

Geen opmerkingen:

Een reactie posten