தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

ஞானசார போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது: சோபித தேரர்!

ஜனாதிபதி விடுத்த அழைப்பினை ரோசி நிராகரித்தார்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 02:28.43 AM GMT ]
வத்திக்கானுக்கான விஜயத்தில் இணைந்து கொள்ளுமாறு ஆளும் கட்சி விடுத்த அழைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க நிராகரித்திருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பாப்பாண்டவரை நேரில் அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளுமாறு ரோசி சேனாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர் அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க ஜனாதிபதியுடன் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
என்னிடம் பயணம் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. கட்சித் தலைவரிடம் அறிவித்திருக்கலாம்.
இந்த விஜயத்தில் ஜோன் அமரதுங்க இணைந்திருக்கக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.
நான் ஜோனை தொடர்புகொள்ள முயற்சித்தேன் முடியவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் பெத்லஹேம் உள்ளிட்ட புனித தலங்களுக்கான விஜயத்தின் போது ஜோன் அமரதுங்க ஜனாதிபதியுடன் இணைந்து பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVet1.html
ஞானசார போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது: சோபித தேரர்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 02:32.27 AM GMT ]
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் முடியாது என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பொம்மையாக சோபித தேரர் செயற்பட்டு வருவதாக ஞானசார தேரர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஓர் இடம் ஏற்பட்டு விடும் என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மாடுகள் இருக்கின்றனதானே? (இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு,அவ்வாறான மாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை)
பதிலளிக்காமல் இருப்பதே சிறந்த பதிலாக இருக்கும். அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக ஞானசார தேரருக்கும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இன்று அதே குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVet2.html

Geen opmerkingen:

Een reactie posten