[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 11:36.48 PM GMT ]
எதிர்வரும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்போது அவர் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு வடக்கு மாகாண உறுப்பினர்கள் மற்றும் மாகாண முதலமைச்சருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பார்வையாளர்களாகவே அழைக்கப்பட்டுள்ளனர். அதனால் அதில் பங்கேற்கமாட்டார்கள் எனக் கூறப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் தாம் பற்குபற்ற முடியாமல் இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மிகவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விளக்கமான கடிதம் ஒன்றை அனுப்பிவைப்பார் என்றும் அதன் விவரம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அறியவந்துள்ளது.
முதலமைச்சரின் கடிதம் ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாராகிவிட்டது என்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு நடவடிக்கை இன்று பகல் மேற்கொள்ளப்பட்டது என்றும், அது எந்நேரமும் ஊடகங்களுக்குக் கிடைக்கலாம் என்றும் மேலும் கூறப்பட்டது.
ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் பார்வையாளர்களாக சமுகம் தருவதற்கே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அவர்களுக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
முதலமைச்சரின் கடிதத்தில் இதுகுறித்த அனைத்து விடயங்களும் சுட்டிக்காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlx1.html
குமார் குணரட்னத்தின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 11:58.06 PM GMT ]
குமார் குணரட்னம் என்ற நொயல் முதலிகே இலங்கைக்கு பயணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கைக்கு எதிராக குணரட்னம் கருத்தரங்குகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குமார் குணரட்னம் நடாத்திய கருத்தரங்கொன்றில் புலி ஆதரவாளர்களம் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை குமார் குணரட்னம் நேற்று வரையில் செலுத்தவில்லை.
எவ்வாறெனினும், குமார் குணரட்னத்தின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன்படி, குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.
வீசா சட்டங்களை மீறி நாட்டுக்குள் தங்கியிருந்தமைக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விதிக்கப்பட்டிருந்த 39,100 ரூபா அபராதத்தை நேற்று செலுத்தப் போவதாக முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொடதெரிவித்திருந்தார்.
எனினும் அபராதப் பணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கறுப்புப் பட்டியலில் குணரட்னத்தின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
தேச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவே அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlx2.html
Geen opmerkingen:
Een reactie posten