தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள்

மனிதனிடம் ஜாமீன் கோரும் தேவதை (ஜெயலலிதா): கிண்டல் செய்யும் சாமி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 12:32.20 PM GMT +05:30 ]
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வைக்கப்படும் போஸ்டர்கள் குறித்து சுப்பிரமணிய சுவாமி கிண்டல் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து, மௌன உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதை முன்னிட்டு, அந்த பகுதி முழுவதும் ஜெயலலிதாவை வாழ்த்தி "தர்ம தேவதைக்கே அநீதியா", "நீதிக்கே தண்டனையா", "தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா" என்றெல்லாம் தமிழ்த் திரையுலகம் சார்பில் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதைக் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, "அம்மா நீதி தேவதை, என்றால், நீதிபதி குன்ஹா சாதரண மனிதர்.
கலியுகத்தில் ஒரு மனிதனிடம் தேவதை ஜாமீன் கோருவதா" என பதிவு செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 01:39.34 PM GMT +05:30 ]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமை வகித்தார். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.newindianews.com/view.php?20SAlddbdeY063402cMQ3222Ym73adcfDOA40eM6AKaecUo4A4ce3JOm23

Geen opmerkingen:

Een reactie posten