தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

பிரிவினை சண்டை வேண்டாம்! ஈழப்பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்! யாழ். ஆயர்!

யாழ் இளவாலையில் வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 02:44.31 PM GMT ]
யாழ். இளவாலை பிரதேசத்தில் 75 வயது மூதாட்டி ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை இரவு 07.00 மணி அளவில் அயல் வீட்டார் வழங்கிய தகவலின் படி இளவாலை பொலிஸார் குறித்த சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
பலியானவர் இராஜநாயகம் இராஜேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக கூறிய பொலிஸார், கொள்ளையடிக்க வந்தவர்கள் இவரைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் நீதவான் விசாரணைகளுக்காக தற்போது அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu0.html

பிரிவினை சண்டை வேண்டாம்! ஈழப்பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்! யாழ். ஆயர்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 02:56.19 PM GMT ]
இங்குள்ள மக்கள் இனி ஒரு ஈழம் வருமென்று எண்ணவில்லை. அதுமட்டுமல்ல அவர்கள் பிரிவினையையும் விரும்பவில்லை.அதுபோல் சண்டையையும் விரும்பவில்லை. ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழவே விரும்புகிறார்கள். இந்நிலையில் இன்னமும் ஈழமென்றும் டயஸ்போரா என்றும் கூறி காலத்தைக்கடத்தாமல் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். 
இவ்வாறு யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் நேற்று முன்தினம் தன்னைச் சந்தித்த அம்பாறை மாவட்ட சர்வமதக் குழுவினரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவை சார்பில் அதன் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உபதலைவர்களான வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், பாஸ்ரர் கிருபைராஜா, பொருளாளர் பாஸ்ரர் எஸ்.கிறிஸ்தோபர், உபசெயலாளர் ஜ.எம்.இப்றாகிம் நிருவாகசபை உறுப்பினர்களான எம்.எஸ்.ஜலீல் அஸ்ஸேய்க், எவ்.எம்.அன்சார் மௌலானா, த.கயிலாயபிள்ளை, எம்.ஜ.ஹிமாயத்துல்லா ஆகியோர் சந்தித்தனர்.
13வருடகாலம் மன்னார் ஆயராக சேவையாற்றி கடந்த 23 வருடகாலமாக யாழ்.ஆயராக இறைசேவை மற்றும் மக்கள் சேவையாற்றி வரும் ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகத்திற்கு வயது 76. ஆனால் சற்றும் தளராது நிதானமாக கருத்துரைத்தார்.
எமக்கு குடும்பமோ பிள்ளைகுட்டிகளோ இல்லை. நாம் பொதுவாக மக்களுக்காகவே எதனையும் கதைப்போம். புனித பாப்பரசரின் வருகையை அரசியலாக்கப்பார்க்கிறார்கள். உலக சமயத்தலைவரொருவரின் விஜயத்தை அரசியலாக்க அனுமதிக்கமுடியாது என்றார்.
மேலும் ஆயர்; வண.தோமஸ் சௌந்தரநாயகம் கருத்துரைக்கையில்,
யாழ்ப்பாணத்தில் சமய இன முரண்பாடுகள் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள். இனங்களிடையே நல்லுறவு நிலவுகிறது. இங்கு கூடுதலாக தேவாலயங்கள் இருந்தாலும் இந்துக்களே 80வீதம் வாழ்கிறார்கள். ஆக 20வீதமானவர்களே கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். சிறுதொகை முஸ்லிம் மக்களும் வாழ்கிறார்கள்.
ஜனாதிபதியின் வருகை
நாட்டின் ஜனாதிபதி அண்மையில் வடபகுதிக்குவந்து 03 தினங்கள் தங்கியிருந்து பல மக்கள் சேவைகளைச் செய்தார். இந்திய உதவியுடன் 24 வருடங்களின் பின் யாழ்தேவி சேவையை மீள ஆரம்பித்து வைத்தார். மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அதுபோல காணியில்லாத 20ஆயிரம் பேருக்கு காணிக்குரிய உரிமங்களை வழங்கினார். எனவே இனிமேல் காணியில்லை என்று சொல்ல முடியாது. தீவுகளுக்கும் சென்று பல உதவிகளை வழங்கினார்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க எதுவுமே செய்யவில்லை. வடபுலத்திலுள்ள மாகாணசபையுடன் அரசாங்கம் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டிருப்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பது ஜனநாயக வழிமுறையாகும். அதனை யாரும் பிழையென்று கூறமுடியாது. தாம் அபிவிருத்திகளை செய்துள்ளோம் ஆனால் மக்கள் வாக்களிக்கவில்லையே என்று அரசாங்கம் புலம்புவதில் பிரயோசனமில்லை. முதலில் மக்கள் மனங்களை அரசாங்கம் வென்றெடுக்கவேண்டும்.
வடபுல மக்கள் வெறும் அபிவிருத்தியைக் கண்டு ஏமாற மாட்டார்கள். இவ்விடயத்தில் அவர்கள் மிகவும் கூர்மையாக இருக்கிறார்கள். மக்கள் தெரிவுசெய்த வட மாகாணசபையையும் இணைத்து அவரது வருகையை வடிவமைத்திருந்தால் ஜனாதிபதி மக்கள் மனங்களையும் அரசியல் இலாபத்தையும் பெற்றிருக்கலாம்.
எனவே ஜனாதிபதி நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார் என்றே கூறுவேன்.
அரசாங்கம் - வடமாகாணசபை முரண்பாடு
வடமாகாணசபை உருவாக்கப்பட்டு 2வருடங்கள் ஆகின்றன. புதிய முதலமைச்சர் தெரிவானார். ஆனால் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவதில் குறியாக இருந்து வருகின்றனர். அவர் அழைத்தால் இவர் போவதில்லை. இவர் அழைத்தால் அவர் வருவதில்லை.
மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றவே மாகாணசபையையும் முதலமைச்சரையும் தெரிவு செய்துள்ளனர். எனவே அவர்களுடன் விட்டுக்கொடுத்து ஒத்துப் போயிருந்தால் இக்கட்டத்திலாவது சுமுக உறவை ஏற்படுத்தியிருக்கலாம்.
20ஆயிரம் பேருக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது வரவேற்புக்குரிய நல்ல விடயம். ஆனால் காணி அதிகாரம் மாகாணசபைக்குள் வருகிறது. எனவே அதனை அவர்களுக்கூடாக வழஙகியிருக்கலாம். இப்படி சின்னச்சின்னக் காரியங்களில் ஒத்துழைப்பைக் காட்டியிருந்தால் முரண்பாடுகளை குறைத்திருக்கலாம்.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அது இந்திய உதவி. சரி அவர்களையும் அழைத்திருக்கலாம்.
முதலமைச்சரை அழைத்து கேட்டபோது மக்களது அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்காமல் இவ்வாறு மஹிந்த சிநதனைத் திட்டத்தை அமுல்படுத்த நாம் துணைபோக வேண்டுமா என்று அவர் கேட்கிறார்.
மக்கள் சந்தோசமில்லாமலுள்ளனர். போரின் வடுக்களை சுமந்தவர்கள் சுமந்த வண்ணமேயுள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ தேவானந்தாவை மட்டும் வைத்துக்கொண்டு இவற்றைச் செயற்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை.
இவர்களது இம்முரண்பாடு எமக்கும் துக்கம் தான். நான் கொழும்பில் அவரைச்சந்;தித்துப் பேசியதனால் இங்கு நான் போகவில்லை.
அரசியல் தீர்வே மக்கள் விருப்பம்
வடபுல மக்கள் தாம் இதுவரை அனுபவித்த துன்பதுயரங்களுக்கு மாற்றீடாக அரசியல் தீர்வை விரும்புகிறார்கள்.ஜனாதிபதி அத்தீர்வை நிச்சயம் வழங்க முடியும். அவ்வாறு செய்தால் அவர் வடபுல மக்களின் ஆதரவைப் பெறமுடியும்.
வடமாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரை நியமியுங்களென பல தடவைகள் முதலமைச்சர் தொடக்கம் மாகாணசபை உறுப்பினர்கள் வரை தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்கள். நடந்ததென்ன?
அதுபோல வடமாகாண பிரதம செயலாளரை மாற்றுமாறு கோரியிருந்தனர். இவர்களிருவரும் ஜனாதிபதியின் சிந்தனையை இங்கு திணிப்பவர்களாக உள்ளனரே தவிர மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார்களாக இல்லையென்பது மாகாணசபையினரின் வாதமாகும்.
எதுவுமே நடக்கவில்லை. முதலிலே இலங்கையில் புரையோடிப் போயுள்ள தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். பிரச்சினையைத் தீர்க்க விரும்பாதோர் இன்னமும் ஈழம் என்ற பதத்தைப் பாவித்து ஈழம் கோரிக்கையை தமிழர்களம் டயஸ்போராவும் கைவிடட்டும், நாம் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிடுவோம் என்கிறார்கள்.
நாம் ஈழக் கோரிக்கையை எப்போதோ கைவிட்டு விட்டோம் என்று த.தே.கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. கூறிவிட்டாரே. இனியென்ன?
ஆலயங்களுக்கு செல்லமுடியாது!
வலிகாமப் பிரதேசத்தில குறிப்பாக கரையோரப் பகுதிகளிலுள்ள அதிலும் காங்கேசன்துறை தொடக்கம் தொண்டமானாறு வரையுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள தேவாலயங்கள், ஆலயங்கள் உடைக்கப்பட்டிருந்;தன. அவற்றைத் திருத்தி வழிபாடாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புலிகளே இல்லாத பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயம் யாருக்காக? ஒன்றில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கவேண்டும் அல்லது அங்குள்ள தேவாலயங்கள் ஆலயங்களை வெளியில் கொண்டு அமைக்கவேண்டும்.
அவரவர் சமய வணக்கஸ்தலங்களை நேரில் சென்று வழிபாடு செய்ய அவரவர்க்கு உரிமையுள்ளது. இது மீறப்படுகிறது. இது நியாயமா?
முதலில் அரசாங்கம்-மாகாணசபை முரண்பாடு களையப்பட வேண்டும். தமிழர்க்கான அரசியல்தீர்வு வழங்கப்படவேண்டும். அப்போதுதான் வடபுலத்தைப் பொறுத்தவரை நிரந்தரமான உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
சுமார் ஒருமணிநேரம் இடம்பெற்ற சுமுகமான சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. வடபுல சமாதானச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu1.html

Geen opmerkingen:

Een reactie posten