தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியிலிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்: ஜே.வி.பி.!



தீயணைப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா- மட்டு.வைத்தியசாலைக்கு நவீன கணனி வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 06:46.45 AM GMT ]
மட்டக்களப்பு மாநகர சபைக்கு தீயணைப்புக் கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் தீயணைப்பு வாகனங்கள் கையளித்தலும் மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
ரூபாய் 10 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் அடிக்கல்லை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நாட்டி வைத்தார்.
அத்தோடு 44 மில்லியன் ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் மற்றும் 30 மில்லியன் பெறுமதியான பிக்கப் வாகனம் என்பவற்றின் ஆவணங்களை மாநகர ஆணையாளர் எம். உதயகுமாரிடம் அமைச்சர் அதாவுல்லாஹ் கையளித்தார்.
நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சாள்ஸ், ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. அப்துல் மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டு போதனா வைத்தியசாலைக்கு நவீன கணனி வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மருத்துவப் பிரிவை நவீன வசதிகளுடன் கூடிய கணனி வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
ஹற்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கணனி வலையமைப்பை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி கிறேஸ் நவரட்ணராஜா, ஹற்ச் நிறுவகத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவி ரம்சீனாலே மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் கலாநிதி கே.கருணாகரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
முதலாவதாக யாழ்ப்பாணத்திலும், இரண்டாவதாக மட்டக்களப்பிலும் அடுத்ததாக திருகோணமலை வைத்தியசாலையில் வலையமைப்பை நிறுவவுள்ளதாக சத்தியம் பிரைவேட் லிமிட்டெட்டின் பணிப்பாளர் அலன் சத்தியதாஸ் தெரிவித்தார்.
இதன்போது சிறுவர்களின் பதிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கோவைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொம்மைகள் வழங்கப்பட்டன.
குழந்தைகள் நலன்காப்பு வைத்திய நிபுணர் அஞ்சலா அருள்பிரகாசம், சிரேஷ்ட வைத்திய அதிகாரி எஸ்.அன்புதாசன், பிராந்திய விற்பனைத் தலைவர் நெலுபெர்ணாண்டோ உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms4.html

பொகவந்தலாவ இளைஞன் கொழும்பில் மரணம் (மலையக செய்திகள்)
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 06:53.55 AM GMT ]
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதி பகுதியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக சேகல்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக சேசல்வத்த பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயதான செல்லப்பன் பாலகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் கொலையா, அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவ​ண்டி விபத்து- சாரதி கவலைக்கிடம்
கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 10.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் சாரதி உட்பட மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கினிகத்தேனை அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms5.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சவாலாக கருதவில்லை: ஐ.தே.க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 07:20.45 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சவாலாக கருதவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் ஹாலீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என நாம் கூறினால் ஜனாதிபதி மீது அச்சம் கொண்டு தான் இவ்வாறு கூறுவதாக ஆளும் கட்சி குற்றம் சுமத்தும்.
நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எங்களுக்கு சவால் கிடையாது.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது நாம் பாரிய வெற்றியை ஈட்டினோம். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்குள் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எங்களால் வெற்றியீட்ட முடியும் என கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றார்கள்.
திட்டமிட்ட முறையில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் அல்லது வேறும் தேர்தல்களை வெற்றியீட்ட முடியும்.
பொது வேட்பாளர் குறித்த நிலைப்பாடு மாறியுள்ளது.தற்போது எங்களது தலைவர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்.
சோபித தேரர் போட்டியிடவில்லை எனக் குறிப்பிடுகின்றார்.
சோபித தேரருக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே? சோபித தேரர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் நிராகரித்துள்ளனர்.ஊவா மாகாணசபைத் தேர்தலில் இந்த விடயம் வெளிச்சமாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஹாலீம் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms7.html
சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியிலிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்: ஜே.வி.பி.
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 07:31.39 AM GMT ]
சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியின் பிடியிலிருந்து மக்கைள மீட்கும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும் என ஜே.வி.பி கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் உழைக்கும் மக்களின் கட்சியான நாம் சர்வதிகார ராஜபக்ச ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
எதிர்வரும் தேர்தல்களின் போது விரிவான ஓர் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பாக நடவடிக்கை எடுப்போம்.
இதனை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம்.  வறிய மக்களின் மனதுகளை மாற்றியமைக்க அரசாங்கம் கொள்கலன் கணக்கில் பொருட்களை விநியோகம் செய்தது.
வேறும் தேர்தல்களில் இல்லாத அளவிற்கு பணம் வழங்கப்பட்டது. ராஜபக்சக்களின் பெயரை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் இவ்வாறு செய்தது.
சசிந்திர ராஜபக்ச தோற்றால் அது ஜனாதிபதியின் தோல்வியாகவே கருதப்படும் இதனால் ஊவா மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்ட அரசாங்கம் கடும் முயற்சி எடுத்தது.
கடந்த தேர்தலின் போது கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைக்கப்பெற்றது.  இந்த தடவை தேர்தலில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த வெற்றியின் பலன்களை மக்கள் அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பில் மோசடி இடம்பெறாவிட்டாலும் மக்களை ஏமாற்றி அரசாங்கம் வாக்குகளை கொள்ளையிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியும் இதனைச் செய்தது.  எனவே எதிர்காலத்தில் மக்கள் இவற்றை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.
நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி ஜே.வி.பியே என சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.  சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmty.html

Geen opmerkingen:

Een reactie posten