தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

இலங்கைக்கு VJP ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படா விட்டால் சிம் கார்ட்டிற்கு ஆப்பு…

அதாவது சிம்காட்கள் வாங்க வரும் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லையெனில் சில சிம்கார்ட் நிறுவன பிரதிநிதிகள் ஏற்க.னவே சிம்கார்ட் வாங்கிய ஒருவரது தேசிய அடையாள அட்டை பிரதியை பயன்படுத்தி சிம்கார்ட்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் முறையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம்கார்ட்கள் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/78345.html

இலங்கைக்கு VJP ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் 5-வது கமலாலய தரிசனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக பாஜக அலுவலகம் முழுவதும் தோரணங்கள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலையில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது மூத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நான் அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 94 மீனவர்களும் , 63 படகுகளும் இன்னும் 10 நாட்களில் மீட்கப்படுவார்கள். மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசியுள்ளேன். மேலும் ராமேசுவரம் மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று சுஷ்மா சுவராஜை சந்திக்கவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்கள் வருமாறு:
கச்சத்தீவை மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்குமா?
தமிழக மீனவர்களின் நலனை காப்பதற்காக நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படும். மேலும் இந்த விஷயத்தில் சட்டசிக்கல்கள் உள்ளன. இவை எதிர்காலத்தில் களையப்படும்.
இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமரை பற்றி இழிவான கருத்து வெளியிடப்பட்டிருந்ததே?
அந்த இணையதளத்தில் தங்களுக்கே தெரியாமல் இந்த கருத்து வெளியானதாக இலங்கை அரசு கூறுகிறது. இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் மத்திய அரசு அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இலங்கை அரசு தற்போதைய இந்திய அரசாங்கத்தை பழைய காங்கிரஸ் அரசை போல் நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/78348.html

Geen opmerkingen:

Een reactie posten