வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் மிரட்டல்…
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இரவு இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறித்த ஊடகவியலாளர் தான் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்த போது, தம்மை யார் என தெரியாது பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு இருப்பதற்கு விருப்பமில்லையா என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் வவுனியாவை சேர்ந்த ஏனைய இரு ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் அண்மையில் ஓமந்தை பிரதேசத்தில் யாழ் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டடிருந்த சமயம் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து ஊடகவியலாளாகளுக்காக குரல் கொடுத்திருந்ததுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்த நிலையிலே இவ் அச்சுரூத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/78338.html
புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்த நாம் இல்லை நியோமல் பெரேரா
நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் குரலை, ஆணைக்குழுவில் ஒலிக்கச் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
பயங்கரவாத அமைப்பு அல்லது பயங்கரவாத நிதிகளில் இயங்கி வரும் தரப்பினரின் கருத்துக்களுக்கு ஆணைக்குழுவில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட்டதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதே தவிர, சர்வதேச சமூகத்தை திருப்படுத்துவதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளை இலக்கு வைத்து ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை துரித கதியில் மே;றகொள்ள விரும்பிய போதிலும், சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு இருப்பதனால் சில கால தாமதம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78341.html
Geen opmerkingen:
Een reactie posten