தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

கோட்டபாய அனுப்பிய "ஸ்பை" வசமாக மாட்டிக்கொண்டார் !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த சம்பவம், அனைத்து சிங்கள அமைச்சர்களையும் கதிகலங்க வைத்துள்ளது. இலங்கை அமைச்சர், மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஒரு நபரை அனுப்பியுள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட அந்த வேவுபார்கும் நபரை அமைச்சர் கையும் மெய்யுமாக பிடித்துவிட்டார். அவர் வேறு யாரும் அல்ல, அமைச்சர் மைத்திபால சிறிசேனாவின் மெய்பாதுகாப்பு வட்டாரத்தில் உள்ள ஒரு காவலாளி தான். இவர் சமீபத்தில் தான் கோட்டபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சினால், குறித்த அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்க நியமனத்தை பெற்றுள்ளார். அமைச்சரை யார் யார் வந்து பார்கிறார்கள். அமைச்சர் என்ன செய்கிறார். என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த காவலாளி திரட்டி கோட்டபாயவின் மேசைக்கு அனுப்பி வந்துள்ளார்.
பிடிபட்ட காவலாளியை அமைச்சரின் ஆதரவாளர்கள் வறுத்து எடுத்ததில், அவர் பல உண்மைகளை கக்கியுள்ளார் என்று கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் மெய்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள், என்று அனைத்து வழிகளிலும் அமைச்சரை வேவுபார்த்து வந்துள்ளார். சம்பளம் போக மேலதிகமாக சுமார் 50,000 ஆயிரம் மாதாந்தம் தனக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாகவும். தாம் அனைத்து தகவல்களையும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கே அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அன் நபரின் மோபைல் போனில் மேலும் சில , முக்கியமான புள்ளிகளின் பிரத்தியேக மோபைல் இலக்கங்கள் காணப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
இதேவேளை இவ்விடையம் அனைத்து அமைச்சர்கள் மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மைத்திரிபாலவுக்கே இன் நிலை என்றால் தமக்கு என்ன நிலை என்று அனைத்து அமைச்சர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பாளர்களில் எவர் எவர் கோட்டபாயவின் விசுவாசி என்று தெரியாத நிலை காணப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாக அமைச்சர் ஒருவர் கொழும்பில் தனது நண்பர்களோடு உரையாடுகையில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிலரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தவேண்டி உள்ளது என்றும், இவ்விடையத்தை மகிந்தவிடம் கொண்டுசெல்லவேண்டி உள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் மகிந்தவிடம் செல்வதால் என்ன பயன் இருக்கிறது ? எதுவே இல்லை என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். இலங்கையில் நடப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி என்பது இவர்களுக்கு எப்போது புரியும் ?
http://www.athirvu.com/newsdetail/861.html

Geen opmerkingen:

Een reactie posten