[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 10:06.05 AM GMT ]
ஐந்து ஆயிரம் லட்சம் ரூபாகடன் வாங்கினால், அதில் ஆயிரம் லட்சம் ரூபா விமான செலவுகளுக்கு சென்று விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திடம் உள்ள மிகப் பெரிய விமானம் யு.எல். 321 இதனை எடுத்து கொண்டு கடன் வாங்குவதற்காக மகிந்த ராஜபக்ஷ உலகம் முழுவதும் பறக்கின்றார்.
ஒரு முறை பயணம் மேற்கொள்ள ஆயிரம் லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிடப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது நாட்டின் பலத்தை காண்பிக்க தனியான விமானத்தில் பயணம் செய்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உலகம் முழுவதும் கடன் வாங்க தனியான விமானத்தில் செல்கிறார் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep3.html
ஊவா தேர்தலில் அரசாங்கம் சிறந்த பாடத்தை கற்கும்!- கயந்த கருணாதிலக
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 10:47.59 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அரசாங்கம் சம்பாதிக்கும் பணத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக ஆசியாவிலேயே மிகப் பெரிய அமைச்சரவையை உருவாக்கி, அமைச்சர்களையும் அவர்களின் சகாக்களையும் பராமரிக்க பயன்படுத்தி வருகிறது.
மிகப் பெரிய நாடான இந்தியா சிறிய அமைச்சரவையை ஏற்படுத்தி முன்னுதாரண்தை காண்பிக்கும் போது, கடந்த வாரம் இரண்டு அமைச்சர்களை நியமித்ததன் மூலம் அரசாங்கம் உலகில் மிகப் பெரிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளது.
அரசாங்கம் இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ளும்.
இதன் காரணமாகவே ஊவா மாகாணத்தின் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சஷீந்திர ராஜபக்ச, நேருக்கு நேரான விவாதங்களுக்கு பயப்படுகிறார்.
அவர் ஊவா மாகாண மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதும் இதற்கு காரணம் எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep4.html
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல்- பதிவிடல்- ஆவணப்படுத்தல்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 10:55.37 AM GMT ]
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பில் விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில், இச்செயல்முனைப்புக்கான பயிலரங்குகள் நடைபெற்று, வழிகாட்டுதலுக்கு அமைய சாட்சியங்கள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவ்விவகாரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவும் சாட்சியங்கள் தங்கள் வாக்குமூலங்களை ஆதாரங்களை வழங்கவும் என http://icppg.org/ எனும் இணையத்தளம் செயற்பாட்டில் இயங்கிவருகின்றது.
மேலும் தொடர்பில் விபரங்களை குறித்த இந்த 0044 786 913 30 73 தொடர்பு கொண்டு நாடுவாரியாக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என இந்த மையம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep5.html
Geen opmerkingen:
Een reactie posten