தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

முல்லைக்கோட்டையை கைப்பற்றி பண்டாரவன்னியன் நினைவு நாள் (படம் இணைப்பு)!!


வன்னி இராச்சியத்தின் இறுதி வன்னியனார் என்ற பெருமையை கொண்ட பண்டாரவன்னியன் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி முல்லைத்தீவுக் கோட்டையை கைப்பற்றி இன்றுடன் 211 ஆவது அண்டு நிறைவு பெறும் நிலையில் வவுனியாவில் வெற்றி விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு காலை 8.45 மணியளவில் வவுனியா அரசாங்க அதிபரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவாகணசபை உறுப்பினாகள் கலந்து கொண்ட மலர் மாலை அணிவித்திருந்தனர்.

வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, ஜனாதிபதி சட்டத்தரணி எம். சிற்றம்பலம், பிராந்திய உள்ளுராட்சி உதவி அணையாளர் அசங்க காஞ்சன குமார ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வில் வரவேற்புரையினை நா. சேனாதிராஜாவும் வரவேற்பு நடனத்தினை நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவிகளும் வழங்க தலைமையுரையினை கலாபூசணம் இ. சிவசோதியும் நினைவுப்பேருரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையும் கவி மன்றத்தினை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் தேசிய வீரன் பண்டரவன்னியன் நாடகத்தினை வவுனியா கலைத்தொடர்பு மையமும் வழங்கியிருந்தது.
25 Aug 2014

Geen opmerkingen:

Een reactie posten