[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 09:39.48 AM GMT ]
அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ள கால்டன் றகர் செவன்ஸ் போட்டி தொடர்பான கொழும்பில் பிரதான பாடசாலைகளின் மாணவ மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கடந்த 31 ஆம் திகதி பாடகர் இராஜ் வீரரத்னவுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவிகள் எதிர்ப்பு வெளியிடப்பட்டமையே இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் என பேசப்படுகிறது.
அன்றைய தினம் கொழும்பு லேடி ரிஜ்வே பெண்கள் மருத்துவமனையும் சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியும் இணைந்து பாடசாலை மண்டபத்தில் சுகாதார கருத்தரங்கொன்றை நடத்தியது.
இந்த கருத்தரங்கிற்கு இடையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜ் வீரரத்ன ஆகியோருக்கு றகர் போட்டி குறித்து தெளிவுபடுத்துவதற்கு பாடசாலை அதிபர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.
இதன் போது இராஜ் வீரரத்ன பாடல் ஒன்றை பாடியதுடன் தான் இருக்கும் இடத்திற்கு மாணவிகளை வந்து நடனமாடுமாறு கேட்டுள்ளார்.
மாணவிகள் பாடலுக்கு நடனமாடுவது தொடர்பில் ஆசிரியர்களும் மாணவ தலைவிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான செயல் பாடசாலைக்கு உகந்ததல்ல எனக் கூறி ஆசிரியர்களும் மாணவ தலைவிகளும் நாமல் மற்றும் இராஜிடம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எதிர்ப்பு வலுத்த காரணத்தில் இருவரும் தமது நடவடிக்கைகளை இடையில் நிறுத்தி விட்டு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
எவ்வாறாயினும் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அப்படியான எதிர்ப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாடப்பட்ட பாடலையே தாம் பாடியதாகவும் பாடகர் இராஜ் கூறியுள்ளார்.
மாணவிகள் பாடல் ஒன்றை பாடுமாறு விடுத்த கோரிக்கைக்கு பாடசாலை அதிபரும் அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கால்டன் றகர் போட்டி தொடர்பான ரி சேர்ட்டுகள் மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp5.html
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ரணிலுடன் இரகசிய பேச்சு (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 10:53.30 AM GMT ]
இவர்களில் சிலர் கடந்த 31 ஆம் திகதி இரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நீண்ட நேரம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது பற்றியும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அரசாங்கத்தின் குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான அணியாக இயங்கவும் மேலும் சிலர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அடுத்து வரும் சில தினங்களில் மேலும் ஒரு முறை கூடி இவ்வாறான இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது என இரு தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
அப்போது மேலும் சிலரை அதில் கலந்து கொள்ள செய்வதாக அரசாங்க தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தேர்தலில் விமல், சம்பிக்க அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டார்கள்
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரங்களில் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாலும் ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தினாலும் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட உடன் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளை அழைத்து கலந்துரையாடுவது வழமை. எனினும் இம்முறை அவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி ஜாதிக ஹெல உறுமயவுடன் எவ்விதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என பேசப்படுகிறது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை அதிகரித்தாலும் சர்வதேச விசாரணையை நிறுத்த முடியாது- ஐ.தே.கட்சி
இறுதிக்கட்ட போரில் பொது மக்கள் கொல்லப்படவில்லை என தெரிவித்து வந்த அரசாங்கம் தற்போது தனது நிலைப்பாட்டை 180 பாகையாக மாற்றி கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறி வந்தது.
ஐ.நா மனித உரிமை பேரவையிலும் இறுதிக்கட்ட போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என அரசாங்கம் கூறியது.
எனினும் தனது நிலைப்பாட்டை தற்போது 180 பாகையாக மாற்றி கொண்டுள்ள அரசாங்கம், நாடாளுமன்றத்திற்கோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கோ எவ்விதமான அறிவிப்பையும் மேற்கொள்ளாது, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரத்தை அதிகரித்து மூன்று வெளிநாட்டவர்களை கொண்ட ஆலோசனை குழுவையும் நியமித்துள்ளது.
சர்வதேசம் முதலில் சர்வதேச விசாரணைகளை கோரவில்லை. உள்நாட்டில் விசாரணை ஒன்றை நடத்துமாறே கோரியது. ஆனால், அரசாங்கம் அப்போது உள்நாட்டு விசாரணையை நடத்த இணங்கவில்லை.
தற்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும் சூழலில், அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை நடத்த தயாராகி வருகிறது.
அரசாங்கம் தற்போது எடுத்துள்ள முடிவை 4 வருடங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்காது.
அரசாங்கம் எந்த நோக்கமும் திட்டமும் இல்லாமல் செயற்படுவதற்கு இது சிறந்த உதாரணம். அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டமைக்கு காரணம் இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பில் தற்பொழுது நடத்தி வரும் விசாரணைகளின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பாதுகாப்புச் சபையில் இந்த அறிக்கைகக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டுமாயின் இலங்கை தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சீனாவும் ரஷ்யாவும் கூறியுள்ளன.
இதன் காரணமாகவே காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மூன்று சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானம் காலம் கடந்த முடிவு. அதிகமான கால தாமதமாகி விட்டது.
காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தடுத்து விட முடியாது.
ஜெனிவா விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்கும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளது.
அப்படியானால் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காலம் வந்துள்ளது- ரணில்
அரசாங்கத்தை மாற்றுவதற்கான உரிய காலம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் வந்துள்ளது. அடுத்த வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுங்கள்.
இலவச கல்வியை மீண்டும் ஏற்படுத்தி கொடுப்பது எப்படி என்பதை நாங்கள் காட்டுகிறோம்.
பாலுக்கு சிறந்த விலை வழங்கப்படும். காய்கறிகளுக்கும் சிறந்த விலை வழங்கப்படும். வீதிகளை நிர்மாணிக்கும் போது கொள்ளையடிக்க மாட்டோம். கொள்ளையடித்தலை இல்லாதொழிப்போம்.
பணத்தை கொள்ளையிடும் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சி இருள் சூழ்ந்த யுகம். இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp6.html
ஜனாதிபதி நியமித்துள்ள வெளிநாட்டு நிபுணர்கள் பல தலைவர்களை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அனுப்பியவர்கள்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 10:59.49 AM GMT ]
சாதம் உசைன், சார்ள்ஸ் டெய்லர், ஸ்லோபோடன் மிலோசவிக் ஆகிய வெளிநாடுகளின் ஜனாதிபதிகளை இவர்கள் போர்க்குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்கள் என திவயின கூறியுள்ளது.
அத்துடன் யூகோஸ்லாவியவை துண்டு துண்டாக பிரிக்க இவர்கள் உதவியுள்ளனர்.
இந்த மூன்று வெளிநாட்டு நிபுணர்களில் ஒருவரான அரச சட்டத்தரணி டொஸ்மண்ட் டி சில்வா, பிரித்தானிய சட்டவாதியான சேம் பிராங்னனின் கொலையை மூடிமறைத்தவர் என சட்டவாதியின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பி அவர்களை சிக்கலில் மாட்டிய இந்த மூன்று வெளிநாட்டு நிபுணர்களுக்கு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp7.html
Geen opmerkingen:
Een reactie posten