[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:46.05 AM GMT ]
சிங்கள நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டை இரண்டாக பிரித்து விடும், நாட்டை விற்று விடும் என்று அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிளவுபடுத்தாது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஐக்கியப்படுத்தும் என்று பிரபாகரன் எண்ணினார்.
இதன் காரணமாகவே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதை பிரபாகரன் தடுத்தார்.
அதேபோல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழத்தை நோக்கி நாட்டை பிளவுபடுத்தும் பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றார்.
அதேபோல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழத்தை நோக்கி நாட்டை பிளவுபடுத்தும் பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றார்.
போரில் வென்றாலும் சர்வதேசத்துடன் பகை ஏற்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நாவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரில் இருவர் இதற்கு முன்னரும் இவ்வாறான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்.
இவர்கள் நாடுகளை பிளவுபடுத்தியுள்ளனர். அரசாங்கம் இந்த பிரச்சினைகளை உரிய முறையில் எதிர்கொள்ளாது நாடு பிளவுபட காரணமாகியுள்ளது. மகிந்த அரசாங்கமே நாட்டை பிளவுபடுத்துகிறது.
அதேபோல் மகிந்த அரசாங்கம் சீனாவுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் நாட்டை அபிவிருத்தி என்ற பெயரில் விற்பனை செய்துள்ளது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி செய்யவில்லை எனவும் அஜித் மன்னப்பெரும கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfpy.html
மக்கள் வாழ்க்கையில் கூட்டுறவானது மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 07:58.07 AM GMT ]
கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர்களின் பணி மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு கிறீன் ஃகிறாஸ் ஹொட்டேலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
போர்க் காலத்தில் எமது வடமாகாண பொருளாதார, வாழ்வாதார வசதிகள் பலவாறாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் காயப்பட்டு, மனதாலும் உடலாலும் பாதிப்புக்குள்ளானார்கள்.
பொருட்களை இழந்தார்கள். குடும்பக் கட்டுக் கோப்பு பாரிய பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை மாற்றி அமைப்பதும் மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் உங்கள் ஒவ்வொருவரின் தலையாய கடனாக இருக்க வேண்டும்.
கூட்டுறவானது மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஒரு உந்துகோலாக அமைய வேண்டும்.
வடமாகாணசபை வரமுன் உங்களுக்கிருந்த மனோநிலை மாற வேண்டும். இப்பொழுது நீங்கள் மக்களுடன் மிக நெருங்கி வந்து விட்டீர்கள். மக்களின் தேவைகள், அவர்களின் ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தையும் அருகில் இருந்து அவதானிக்க வேண்டியவர்களாகி உள்ளீர்கள்.
அவதானித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்ற கருத்தை நீங்கள் மக்கட் சேவையாற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஒரு முக்கியமான பதவியில் இருக்கின்றீர்கள். அதனைச் செவ்வனே செய்ய நீங்கள் முன்வரவேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்திற்கும் அதாவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்குமிடையில் ஒரு பாலமாக நீங்கள் இருந்து கடமையாற்றுகின்றீர்கள் என்பதை மறக்கக்கூடாது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp1.html
பிள்ளையானின் அலுவலகத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 08:51.57 AM GMT ]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த பழைய அலுவலகம் திருகோணமலை கந்தசாமி கோயில் வீதியில் அமைந்துள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்றம் கைக்குண்டை அழிக்க உத்தரவிட்டது. இந்த கைக்குண்டு சுமார் 7 வருடங்கள் பழையானது என கண்டறியப்பட்டுள்ளது.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp2.html
அனுரகுமார திஸாநாயக்கவை கைது செய்யுங்கள்: ஆலோசனை வழங்கிய சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 08:53.48 AM GMT ]
இரத்தினபுரியில் அண்மையில் வாகன விபத்துக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுரகுமார திஸாநாயக்கவின் நலன் அறிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
அப்போது அனுரகுமாரவை ஒய்வெடுக்குமாறு அவர் கூறிய போதே பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல் நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலங்க சுமதிபால, டிரான் அலஸ், ஜயந்த கெட்டகொட ஆகியோரும் மறுநாள் கரு ஜயசூரிய, அத்துரலி ரத்ன தேரர், அஜித் பெரேரா, அமைச்சர் மேர்வின் சில்வா, சரத் பொன்சேகா, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.
சரத் பொன்சேகா சென்றிருந்த சமயத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். “நீங்கள் சிறிது காலம் ஓய்வெடுங்கள்” என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
“அப்படியானால் நீங்கள் அனுரகுமார திஸாநாயக்கவை கைது செய்யுங்கள்” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp3.html
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி: மகிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 08:58.03 AM GMT ]
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் நோக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தால், தூதரகத்திற்கு சற்று தொலைவில் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தூதரகத்தை இழுத்து மூட வேண்டும், இலங்கையுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்தியப் பிரதமரையும் தமிழக முதலமைச்சரையும் இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டமை முழு இந்தியாவையும் இழிவுப்படுத்தும் செயல் என தமிழக வாழ்வுரிமை கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfp4.html
Geen opmerkingen:
Een reactie posten