தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன!– சம்பந்தன்!

இலங்கை அரசாங்கத்துக்கு சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை: ரணில் - பொய் என்கிறார் பீரிஸ்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 03:48.08 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை சட்டத்துக்கு புறம்பான செயல் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், குறித்த நிபுணர் குழுவுக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இது எந்த சட்டத்துக்கு கீழ் வழங்கப்படுகிறது.
இலங்கையின் சட்டப்படி விசாரணை ஆணைக்குழுவின் கீழ் எந்த கொடுப்பனவையும் செய்ய முடியாது.
இந்தநிலையில் எதனைக்கொண்டு நிபுணர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இலங்கையின் சட்டமா அதிபரை ஏன் அணுகவில்லை.
இலங்கையின் சட்டமா அதிபர் மீது அரசாங்கத்துக்கு நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் முகமாகவே இந்த நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே இதில் சட்டப்பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய, பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலேயே வெளிநாட்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu5.html
சென்னையில் இலங்கை பிரதிநிதிகள்: தமிழக சட்டத்தரணிகள் கோஷம்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 04:16.16 PM GMT ]
சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் ஒழுங்கு செய்துள்ள மாநாடு ஒன்றில், இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக குற்றம் சுமத்தி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்டத்தரணிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது முன்னெடுத்த அவதூறை கண்டித்து இதன்போது சட்டத்தரணிகள் கோஷமிட்டனர்.
இதன்போது அங்கு வந்த பொலிஸார், ” 2025 ஆம் ஆண்டில் பசியின் சவாலை பூச்சியமாக்கல்” என்ற தலைப்பிலான மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் இலங்கை பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
எனினும் இலங்கை விவசாய அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சந்திரசிறி என்பவர் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாகவும் அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர். எனினும் இதனை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu6.html
பொதுபல சேனா அமைப்பை விட்டு விலகவில்லை!– கிரம விமலஜோதி தேரர்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 12:08.20 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பை விட்டு விலகவில்லை என கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தமையினால் அமைப்பின் பணிகளில் செயற்பாட்டு ரீதியாக அண்மையில் பங்களிப்புச் செய்ய முடியவில்லை.
எனினும், அமைப்பை விட்டு நான் விலகவில்லை.
நூல் ஒன்றை மொழி பெயர்த்துக் கொண்டிருப்பதனால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டது.
அளுத்கம சம்பவத்தின் போது இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை பேர் காயமடைந்தனர். இத்தனை கடைகள் உடைக்கப்பட்டன என பொய்யான தகவல்களே எனக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் அமைதியை உரிய முறையில் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சமூக சாபத்திற்கு இலக்காக நேரிடும் என கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அளுத்கம சம்பவம் இடம்பெற்ற போது பொதுபல சேனாவிலிருந்து விலகிக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnvy.html
இலங்கையர் ஒருவர் நம்பிக்கை துரோகம்!- துருக்கி தூதரகம் முறைப்பாடு
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 12:35.02 AM GMT ]
இலங்கையர் ஒருவர் தமக்கு நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயற்பட்டார் என்று குற்றம் சுமத்தி இலங்கையில் உள்ள துருக்கி தூதரகம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
கொழும்பு 4ல் உள்ள வீடு ஒன்றை தமது நிரந்தர தூதரக கட்டிடமாக செயற்படுத்தும் முகமாக அதன் உரிமையை கொண்டுள்ள கொழும்பு 5 ஐ சேர்ந்த ஒருவருடன் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இதன்படி அவருக்கு முற்பணமாக 8,500 டொலர்களும் மாத வாடகையாக 7,000 டொலர்களும் வழங்க உடன்படிக்கை எட்டப்பட்டது.
இதற்கிடையில் குறித்த வீட்டை தூதரக கட்டிடமாக புனரமைத்து தருவதற்காக துருக்கி தூதரகத்தினால் குறித்த உரிமையாளருக்கு 3.8 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டன.
எனினும் பல மாதங்கள் கடந்தும் அவர் தமது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதிவானிடம் நேற்று மாலை கொண்டு வரப்பட்ட போது துருக்கி தூதரகம் வழங்கியதாக கூறப்படும் 3.8 மில்லியன் ரூபாய்களுக்கான காசோலைகளின் பரிமாற்றங்களை வங்கியில் பரீட்சிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnvz.html
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன!– சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 12:45.23 AM GMT ]
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காலவரதேய சட்டம் தொடர்பிலான நாடாளுன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன.
போரின் பின்னர் வடக்கு கிழக்கில் புதிததாக மக்கள் குடியேற்றப்படுகின்றனர். இது பாரதூரமான ஓர் பிரச்சினையாகும்.
காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுவதனை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றது.
இந்து மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் புதிதாக பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின்றன.
நான் கௌதம புத்தரை மதிக்கின்றேன். என்னை பிழையாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு பௌத்தரேனும் இல்லாத ஊரில் விஹாரைகளை அமைப்பதன் பயன் என்ன? யாருடைய தேவைக்கு அமைய இவ்வாறு விஹாரைகள் அமைக்கப்படுகின்றன.
இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படுவதில்லை.
வடக்கு கிழக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
இது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியதல்ல
வடக்கு கிழக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவது இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முரணானது.
வடக்கு கிழக்கை தமிழர் தாயக பூமியாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் செயலாகும்.
காலவரோதய சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் நலன்களுக்காக ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு முப்பது மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறு தமிழர்கள் நடத்தப்படுகின்றனர்?. ஏன் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்படுகின்றனர்?.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் குறைந்தளவு நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமாகுமா?
உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv0.html

Geen opmerkingen:

Een reactie posten