ஒரு பக்கம் பிக்குகள் அட்டகாசம் செய்ய மறு முனையில் துப்பாக்கி காட்டி அவர்களிடம் கொள்ளை !
[ Aug 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2645 ]

நாட்டில் நடக்கும் பல விடையங்களில் இலங்கை புத்த பிக்குகள் மூக்கை நுளைப்பது வழக்கம். முஸ்லீம்களின் மசூதிகளை இடிப்பது முதல்கொண்டு சைவக் கோவில்களை இடிப்பது வரை இவர்கள் தான் முன் நின்று செய்கிறார்கள். அப்படி இருக்க யாரோ ஒரு நபர் இந்த புத்த பிக்குகளுக்கு துப்பாக்கியை காட்டி, பொருகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார் என்ற செய்தியும் அதிர்வு இணையத்திற்கு எட்டியுள்ளது. கல்தோட்டை புகுல்யாய விகாரையில் உள்ள 5 புத்த பிக்குகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கிருந்த பெறுமதியான பொருட்களை நேற்று வியாழக்கிழமை (07) அதிகாலை ஒரு குழுவினர் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புத்தபிக்கு ஒருவர் விகாரையின் கதவை திறந்த போது உள்ளே நுழைந்த கொள்ளை குழுவினர், அங்கிருந்த பண்டைய காலத்தை சேர்ந்த ஒலை சுவடிகள், பித்தளை சிலை மற்றும் அலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். சம்பவம் தொடர்பில் யாரும் அடையாளம் காணப்படவில்லையெனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்தோட்டை பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
http://www.athirvu.com/newsdetail/710.html
பிக்கு மாணவன் உட்பட இரு சிறுவர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு !
[ Aug 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2280 ]

கடுகண்ணாவைப் பொலிஸ் பிரிவிலுள்ள திஸ்மட பிரதேசத்திலுள்ள விகாரையின் பிக்கு மாணவன் ஒருவனும் மற்றுமொரு சிறுவனும் கடத்தப்பட்டு கை,கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தேயிலைத் தோட்டமொன்னிறிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பிக்கு மாணவன் 13 வயதுடையவரெனவும் விகாரையில் இருந்த மற்றைய சிறுவன் 14 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்படுகிறது. விகாரையில் எவ்வித பொருட்களும் களவாடப்படாத நிலையில் இவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இச் சம்பவம் தொடாபாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/711.html
Geen opmerkingen:
Een reactie posten