[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 05:58.11 AM GMT ]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி செயற்றிட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை ஈ.பி.டி.பி கட்சியினர் தமது கட்சி நிதியினைப்போன்று பாவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்கீழ் தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடமே கருத்திட்ட முன்மொழிவுகளை கோரும் ஈ.பி.டி.பியினரின் செயற்பாட்டை தடுக்குமாறு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு வடக்குமாகாணசபை பேரவை தலைவர் எழுத்துமூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் வலியுறுத்தும் வகையில் கடந்த 21ம் திகதி வடமாகாணசபை அமர்வில் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கமைவாகவே குறித்த கடிதம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும், ஆளுநர் ஜீ,ஏ.சந்திரசிறி, மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணசபையின் 21.08.2014ம் திகதிய அமர்வின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி ஒன்றை தங்களுக்கு இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.
முதலில் அனைத்து தரப்பினரையும் ஜனநாயக முறையான திட்டமிடல், கருத்திட்டங்களை இனங்காணல், நடைமுறைப்படுத்துதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதான இந்நிகழ்ச்சி திட்டத்திற்கு எமது பாராட்டுதல்களை தெரிவிக்க விரும்புகின்றோம்.
இந்நிகழ்ச்சி திட்டமானது மாவட்டச் செயலாளர்களுக்கும். சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும், நிதிகளை விடுவித்தல் தொடர்பாகவும் குறித்த நிகழ்ச்சி திட்டப் பகுதிக்குரிய பிரதேச செயலாளர்கள், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள், விவசாய ஆராய்ச்சி அலுவலர்கள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் ஈடுபாடு பற்றியும் விரித்துரைக்கின்றது.
ஆயினும் இது விடயத்தில் தங்கள் அமைச்சினால் விதித்துரைக்கப்பட்ட வழிமுறை நிரலின் படியான கொள்கைகளும், நடைமுறைகளும் விசேடமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படையாகவே மீறப்படுவதனை மிக வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மாகாணசபை உறுப்பினாகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களாக விளங்கும், அரசியல் தலைவர்கள் இந்நிகழ்ச்சி திட்டத்தில் உள்வாங்கப்படாதிருப்பதாகவே தோன்றுகின்றது.
இது இவ்வாறிருக்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபைகளில் உள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தமது கட்சிக்கு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குமென ரூபா ஒரு மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கருத்திட்ட முன்மொழிவுகளை அதற்கென தம்மிடம் சமர்ப்பிக்குமாறும், தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை கோரி வருகின்றனர். இது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாததும் திட்டவழிமுறை நிரலின் விதிகளை அப்பட்டமாக மீறுவதுமாகும்.
இதில் குறிப்பிடத்தக்க துன்பகரமான விடயம் யாதெனில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், சம்மந்தப்பட்ட பகுதி அரசியல் தலைவர்களும் இத்தகைய திட்டம் பற்றி அறிய முடியாத நிலையிலிருப்பதாகும்.
இந்நிலையானது நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை ஆகிய சீர் இலக்குகளை மீறுவதாக உள்ளது. ஆகவே இது விடயமாக தங்கள் அமைச்சின் கைநூல் வழிகாட்டலினை இறுககமாக பின்பற்றுமாறு குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை பணிக்குமாறும், ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்களின் அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தவும், விடயத்தில் தங்களின் அமைப்பினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் பணிக்கும்படி கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.'
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno1.html
இளைஞரை தாக்கிய யுவதி கைது (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 06:17.23 AM GMT ]
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டவர் வைத்தியசாலையில்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் போட்றி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் மீது பாரிய கல் ஒன்று அவர்கள் மீது விழுந்ததன் காரணமாக ஒருவர் கவலைக்கிடம், மற்றொருவர் படுகாயம், இன்னொருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது குறித்த இருவர் மீது கல் ஒன்று விழுந்ததன் காரணமாக மாணிக்ககல் அகழ்வுக்கு தோண்டப்பட்ட குழியில் அவர்கள் இருவரும் விழுந்துள்ளனர்.
இந்த அகழ்வுக்கு சென்ற மற்றுமொருவர் அவர்களை காப்பாற்றி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக இருவரையும் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் 27.08.2014 அன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு மாணிக்ககல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர் வாவியில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியிலிருந்து 66 வயதுடைய ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை எனும் முதியவரின் சடலம் செவ்வாய்கிழமை இரவு
மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர் பி.மேகலா தெரிவித்தார்.
மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர் பி.மேகலா தெரிவித்தார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
சந்திவெளி, கண்ணகை அம்மன் கோயில் வீதி எனும் விலாசத்தில் வசித்து வந்த இவர் செவ்வாய்க்கிழமை ஆடு கட்டுவதற்காக களப்பின் மறுகரையிலுள்ள திகிலிவெட்டை
எனும் கிராமத்திற்குப் போவதாக வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனும் கிராமத்திற்குப் போவதாக வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அவரது மகன் இரவு ஏழு மணியளவில் அருகிலுள்ள சந்திவெளி களப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காகச் சென்ற போது தோணியொன்று அநாதராவாகக் களப்பில் கிடந்ததைக்
கண்டு டோர்ச் லைற் மூலம் தேடிப் பார்த்துள்ளார்.
கண்டு டோர்ச் லைற் மூலம் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது தனது தந்தை களப்பில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு ஏனைய மீனவர்களுமாகச் சேர்ந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno3.html
Geen opmerkingen:
Een reactie posten