தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்: வைகோ

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் - சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 06:19.24 AM GMT ]
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விடுதலைப் புலிகள் ஒப்பரேஷன் எல்லாளன் என்ற பெயரில் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் 14 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன் 16 விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno4.html
தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்: வைகோ
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 06:24.57 AM GMT ]
 தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். ஆகவே உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.
ம.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ‘ஆய்வுக்களம்’ என்ற பெயரில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.  கூட்டத்தில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார்.
கூட்ட முடிவில், வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வைகோ அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?.
பதில்:-  இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
போர் குற்றவாளியான ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததை ஐ.நா. மன்றம் திரும்ப பெற வேண்டும். அப்போதுதான், ஐ.நா.வின் சுயமரியாதை காக்கப்படும். இதை ஐ.நா. மன்றத்திற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.
கேள்வி:- இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ஒருங்கிணைந்த இலங்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆனால், நீண்ட காலமாக நீங்கள் தனி ஈழத்திற்கு குரல் கொடுத்து வருகிறீர்களே?.
பதில்:- மத்திய ஆட்சியாளர்கள் தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க வேண்டும் என்றால் சுதந்திர தனி ஈழம் அமைந்தால்தான் முடியும்.
எனவே, உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno5.html

Geen opmerkingen:

Een reactie posten