தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

நல்லூருக்கு காவடி எடுத்த ஆயிரக்கணக்கான படையினர்

தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடலில் காணாமல் போயினர்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 03:03.17 AM GMT ]
மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற நான்கு தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெ ஹிந்து வெளியிட்டுள்ளது.
மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கு சென்ற இவர்கள் கச்சதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அவர்களின் படகில் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.
இந்தநிலையில் அந்தப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் மூன்று படகுகளில் இருந்த மீனவர்கள் குறித்த படகில் உள்ளவர்களை காப்பாற்ற சென்றனர்.
எனினும் தாம் படகை சீர்செய்த பின்னர் திரும்புவதாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தமது படகை சீர்செய்த பின்னர் திரும்பியிருக்க வேண்டுமாயின் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும்
எனினும் அவர்கள் கரை திரும்பாமையை அடுத்து முதல்கட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இன்று காலை முதல் ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மீனவத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex6.html
தேர்தல் சட்டங்களை மீறும் ஆளும் கட்சியினர் - கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையாளர்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 05:19.48 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முதுகெலும்பு இல்லை என ஜனசெத்த முன்னணி கட்சியின் தலைவர் சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு தனியான தேர்தல் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஊவா மாகாணத்தில் ஆளும் கட்சியினர் பாரிய பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் கட்சியினர் முற்றுமுழுதாக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றனர்.
தேர்தல் ஆணையாளருக்கு முதுகெலும்பு கிடையாது. அவர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்.
எதிர்க்கட்சிகளினால் சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஊவா மாகாணத்தில் தற்போது தேர்தல் காட்டுச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன என சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnoy.html

நல்லூருக்கு காவடி எடுத்த ஆயிரக்கணக்கான படையினர்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 05:50.10 AM GMT ]
நல்லூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை படையினர் காவடி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூரில் இன்று கலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான படையினர் கலந்து கொண்டு காவடி எடுத்துள்ளனர்.
நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் படையினர் காவடிகள் எடுத்து ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள்.
இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno0.html

Geen opmerkingen:

Een reactie posten