[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 04:22.30 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில நேற்று கொழும்பில் தனியார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.
அதன் போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2001 மற்றும் 2003 ஆண்டுகளில் இந்நாட்டையே காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். அவரது துரோகங்களை இலகுவில் மறந்துவிடவோ, மன்னிக்கவோ முடியாது.
தற்போது கூட அவர் நாட்டு மக்களின் நலன் தொடர்பில் கவலைப்படுவதாக தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் நலன், இந்திய நலன் தொடர்பில் தான் அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை இந்தியா தனது தூதுவராக வேறொருவரை இங்கு அனுப்பத் தேவையில்லை. அந்த விடயத்தை மிகச் சிறப்பாக ரணில் விக்கிரமசிங்க கவனித்துக் கொள்வார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் வருவதென்பது கனவிலும் நடக்காது. 2021ம் ஆண்டு வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பதவியில் இருப்பார்.
அதிலும் ரணிலின் தலைமையில் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் படுதோல்வியையே சந்திக்கும். எனவே கௌரவமான தோல்வியைத் தழுவ வேண்டுமாயின் ரணிலின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfw0.html
பௌத்த மதத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி: அஸ்கிரி பீடாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 04:40.11 PM GMT ]
மாத்தளையில் இன்று நடைபெற்ற 119ம் தேசிய தஹாம் பாடசாலை நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தை இல்லாதொழிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
எதிர்கால தேர்தல் காரணமாக பௌத்த சாசன பாதுகாப்பு சட்டத்தை கூட கிடப்பில் போட முயற்சிக்கப்படுவதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
விஹாரை பூமியில் அரசாங்கத்தின் செலவில் ஏதேனும் நிர்மாணிக்கப்பட்டால் அதன் சட்ட பூர்வ உரிமை அரசாங்கத்தைச் சாரும் என மத்திய மாகாண விஹாரைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கருத்து வெளியிட வேண்டுமென உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமர் டி.எம் ஜயரட்னவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfw1.html
Geen opmerkingen:
Een reactie posten