தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னால் இந்தியாவில் முகவரி இல்லாத விடுதலைப் புலிகள் பதில் அளிப்பார்களா?

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 03:15.46 PM GMT ]
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
நோ பயர் ஸோன் உட்பட்ட இலங்கையின் போர் தொடர்பான விவரண படங்களை தயாரித்த கெலும் மக்ரே, இறுதிப்போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமையை காட்டியிருந்தார்.
இந்தநிலையில் விசாரணைக் குழுவுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக செவ்வியளித்த அவர், தாம் விசாரணைக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv7.html
சீன ஜனாதிபதி இலங்கை, இந்தியா, பாகிஸ்தானுக்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 04:14.31 PM GMT ]
எதிர்வரும் வாரங்களில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாட்டுக்கு அரசாங்கங்களுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதே சீன ஜனாதிபதியின் விஜய நோக்கமாக உள்ளது.
இந்தநிலையில் சீன அதிகாரிகள் தமது ஜனாதிபதியின் விஜய திகதிகளை தயாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் டெய்லி டோன் பத்திரிகை செய்தியின்படி சீன ஜனாதிபதி இந்த மாத இறுதியில் தமது நாட்டுக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னால் இந்தியாவில் முகவரி இல்லாத விடுதலைப் புலிகள் பதில் அளிப்பார்களா?
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 04:02.00 PM GMT ]
சட்டரீதியற்ற நடவடிக்கைகள் (தடை) மக்கள் தீர்ப்பாயம் எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதியன்று புதுடில்லியில் கூடவுள்ளது.
இதன்போது சட்டரீதியற்;ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று ஏன் இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது விதித்துள்ள ஐந்து வருட தடையை நீடிக்கக்கூடாது என்பதற்கு பதில் வழங்கவேண்டும்
இதற்காக அழைப்பாணை ஜூலை 17 ஆம் திகதியன்று விடுக்கப்பட்டபோதும் அதனை யாருக்கு எங்கே அனுப்புவது என்று தெரியாதநிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளமையால், அந்த இயக்கத்துக்கு முகவரிகள் இல்லை. எனவே தீர்ப்பாயம் குறித்த அறிவித்தலை எங்கே அனுப்புவது என்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.
இந்த பிரச்சினை காரணமாகவே 2013 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஏற்ப விடுதலைப்புலிகள் மீதான தடை 2 முதல் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுததலைப்புலிகளின் பதிலை பெற்றுக்கொள்வதற்காக தீர்ப்பாயத்தின் அழைப்பாணையை இந்திய உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்க தீர்ப்பாயம் கேட்டுக்;கொண்டது.
அத்துடன் தமிழகத்தின் செய்தி;த்தாள்களிலும் இந்த அறிவித்தலை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு உரிய முறையில் விடுதலைப்புலிகளின் தரப்பில் இருந்து தீர்ப்பாயத்தின் முன்னால் பதில் தரப்படாவிட்டால்ää மீண்டும் விடுதலைப் புலிகள் மீதான 5 வருட தடைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விடும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfwy.html

Geen opmerkingen:

Een reactie posten