சின்னத்துரை வெள்ளிக்கிழமை மாலை 5.30-மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது BMW வாகனமொன்றை செலுத்திவந்த 16-வயது சாரதி ஒருவரால் மோதப்பட்டுள்ளார் என  ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி கிளின்ற் ஸ்ரிப் தெரிவித்துள்ளார். சனிபுறூக் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டு அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இமானுவேல் சின்னத்துரை அவரது பாடசாலை நண்பிகள் ஐவரால் விபத்து நடந்த சமயம் அடையாளம் காட்டப்பட்டார் என தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெறுவதற்கு சிறிது முன்னராக மேல்வேர்ன் கிறிஸ்ரியன் அசெம்ப்ளி கட்டிட வேலையில் தன்னார்வ தொண்டராக பணிபுரிந்து கொண்டிருந்தார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் Lester B. Pearson high school-ல் அண்மையில் Grade 12, முடித்துள்ளார். நர்சிங் படிப்பது அவரது எதிர்கால திட்டமாக இருந்துள்ளது.
சின்னத்துரை அவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
சைக்கிளும் வாகனமும் செப்பேட் அவெனியுவில் மேற்கு நோக்கி பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகம் விபத்திற்கு காரணமாக இருக்கலாமென  கருதப்பகின்ற போதும் உறுதிப்படுத்தப் படவில்லை.
cycteen