தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

கிரான் பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பகுதிகளில் மீள்குடியேற்றம் (செய்தித் துளிகள்)!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற பொதுவேட்பாளர் முறையே சாதகமாகும்: ரவி கருணாநாயக்க
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:19.58 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையிலேயே ரவி கருணாநாயக்க தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.
அல்லது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்று ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.
எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் தெரிவின்போது அவர், அரசாங்கத்தின் முகவராக இருந்து விடக்கூடாது என்று ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த தருணத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்று அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உறுதிமொழியை வழங்கவேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க கேட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex1.html

கிரான் பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பகுதிகளில் மீள்குடியேற்றம் (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:27.12 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் மற்றும் கொம்மாதுறை படை முகாமின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
படைமுகாம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 120 குடும்பங்கள் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன.
கிரான் பகுதியில் 60 குடும்பங்களும் முறக்கொட்டாஞ்சேனையில் 66 குடும்பங்களும் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன.
இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிவுறுத்தும் நிகழ்வும் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
கிரான் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாஸ, உதவிச்செயலாளர் நஜீமுடீன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெயர்ந்தவர்களுக்கு கருத்துகள் பகிரப்பட்டன.
கூட்டமைப்பிற்கு இந்து மதம் பற்றி போதிக்கப்பட வேண்டும்- அருண்காந்த்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்து மதம் பற்றி போதிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை இந்துப் பேரவையின் தலைவர் அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
இந்து மதம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறப்பினர்களுக்கு போதிப்பதன் மூலம், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அவர்கள் செயற்படுவதனை தவிர்க்க முடியும்.
தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரும் இவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். பௌத்த இந்து உறவுகளை சீர்குலைக்கும் வகையில் சில ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் இந்துக்கள் வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை வெளிக்காட்டும் வகையில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் பௌத்த மத வழிபாட்டுத் தளங்கள் அமைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.
சில அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பௌத்த மக்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்பதே வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பணையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
யானைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மக்களை யோகேஸ்வரன் எம்.பி நேரில் சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பகுதியில் யானைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள மண்டூர் 14ம் கொலணி கிராம மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை சந்தித்தார்.
வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள மண்டூர் 14ம் கொலணி கிராமத்தில் யானைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாதிப்பு நிலைமை தொடர்பாகவும், தங்கள் கிராமத்தின் குறைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
இதன்போது மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் வீடு இல்லாத பிரச்சினை, குடிநீர் பிரச்சனை, இங்கினியாகல நீர் திறக்கப்படாததால் ஏற்படும் நீர்ப் பிரச்சினை, வீதிப் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை போன்ற பல விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அத்தோடு யானைகளின் தொல்லையால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமது விவசாயம், தொழில் போன்றவை பாதிக்கப்படுவதாகவும், யானைகள் மக்கள் வாழும் பகுதியில் ஊடுருவுவதால் இரவில் பெரும் பயத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஒரு மாத்தில் ஒரு நாள் மாத்திரமே இங்கு வருகின்றனர். தங்களுக்கு யானைகளை துரத்தும் வெடிகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடம் உறுதியளித்தார்.
இவ் மக்கள் சந்திப்பின் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்க செயலாளர் கதிர்பாரதிதாசன் கலந்து கொண்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdex3.html

Geen opmerkingen:

Een reactie posten